அம்பாள் சந்நிதியில் காணப்படும் ஒரு பாடல் “தீமருவு செங்கையான் திருத்தே வூர்வாழ் நாதன் தேவபுரீசுரரை வளரும் காமருவு கதலியின்பால் கருத்தர்தமைக் கௌதமரும் குபேரனோ டிந்திரன் தானும் நாமருவு குருவுடனே சூரியனும் போற்றிசெயச் சம்பந்தர் பதிகமோத மாமதுர பாஷணி மலர்க்கழலை மறுமையோடு இம்மைக்கும் மறவேன் நானே.” (மு.ஆ. அருணாசலமுதலியார் இயற்றியது) “- நீளுவகைப் பாவூரிசையிற் பயன் சுவையிற் பாங்குடைய தேவூர் வளர்தேவ தேவனே.” (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. தேவபுரீஸ்வரர் திருக்கோயில் தேவூர் & அஞ்சல் 611 109. (வழி) கீவளூர் - கீவளூர் வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம். 203/86. திருப்பள்ளியின் முக்கூடல் திருப்பள்ளிமுக்கூடல் குருவிராமேஸ்வரம் | சோழநாட்டு (தென்கரை)த் தலம். மக்கள் வழக்கில் ‘திருப்பள்ளிமுக்கூடல்’ என்று இன்று வழங்குகிறது. பழைய சிவத்தலமஞ்சரி நூலில் இத்தலத்தின் பெயர் ‘அரியான் பள்ளி’ என்று குறிக்கப்பட்டுள்ளது. (அரிக்கரியான் பள்ளி என்றும் அரியான்பள்ளி என்றும் அக்கால மக்கள் வழங்கி வந்தனராதலின் அரியான்பள்ளி என்று அந்நூலில் குறித்தனர்.) ஆனால் இன்று இப்பெயர் மாறி, ‘திருப்பள்ளி முக்கூடல்’ என்றே வழங்குகிறது. அப்பெயர் சொல்லிக் கேட்டால் இன்றுள்ள மக்களுக்குத் தெரிகிறது. மேலும், இத்தல வரலாறு ஜடாயுவுடன் தொடர்புடையதாதலால் |