பக்கம் எண் :

636 திருமுறைத்தலங்கள்


204/87. திருவாரூர்
205/88. ஆரூர் அரநெறி
206/89. ஆரூர்ப்பரவையுண்மண்டளி

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     மயிலாடுதுறை, சிதம்பரம், தஞ்சாவூர், திருச்சி, காரைக்கால் முதலிய
ஊர்களிலிருந்து பேருந்துகள் நிரம்பவுள்ளன. இருப்புப் பாதை நிலையம்.
இத்தலத்தின் வடபால் சுக்கனாறும், தென்பால் ஓடம் போக்கியாறும்
ஓடுகின்றன.

     “பிறக்க முத்தி திருவாரூர்” என்று புகழப்படும் சிறப்பினது.
மூலாதாரத்தலம். ‘திருவாரூர்த்தேர் அழகு.’ பஞ்சபூதத்தலங்களுள்
பிருதிவித்தலம். எல்லாச் சிவாலயங்களின் சந்நிதித்தியமும் சாயரக்ஷை
எனப்படும் திருவந்திக்காப்பு நேரத்தில் இத்தலத்தில் விளங்குவதாக ஐதீகம்.
சுந்தரர், திருத்தொண்டத் தொகையைப் பாடுவதற்கு, அடியார்களின்
பெருமைகளை விளக்கிய பெருமை இப்பதிக்கேயுரியது. பரவையார் அவதரித்த
பதி. ‘கமலை’ என்னும் பராசக்தி தவம் செய்யுமிடம். திருமகள் இராமர்
மன்மதன் முதலியோர் வழிபட்ட பதி. முசுகுந்த சோழன் ஆட்சி செய்த
சீர்மையுடையது. இத்தலத்திற்குரிய வேறுபெயர்கள் :- (1) க்ஷேத்ரவரபுரம்
(2) ஆடகேசுரபுரம் (3) தேவயாகபுரம் (4) முசுகுந்தபுரம் (5) கலிசெலா நகரம் (6) அந்தரகேசுபுரம் (7) வன்மீகநாதபுரம் (8) தேவாசிரியபுரம் (9) சமற்காரபுரம்
(10) மூலாதாரபுரம் (11) கமலாலயபுரம் என்பன.

    தியாகராஜா பெருஞ்சிறப்புடன் அஜபா நடன மூர்த்தியாகத் திகழும்
தலம். செல்வத்தியாகேசர், மனுச்சோழனுக்கு அருள்செய்த பெரும் பதி.
இவ்வரலாற்றைப் பெரிய புராணத்தின் வாயிலாக அறியலாம். இத்தியாகேசப்
பெருமானே சோமாசிமாற நாயனாரின் வேள்விக்கு எழுந்தருளி அவிர்ப்பாகம்
ஏற்றார் என்னும் வரலாற்றை திருமாகாளத் தலபுராணத்தால் அறிகிறோம்.
திருவாரூரில் பாடல் பெற்ற தலங்களுள் மூன்று, அவை :- (1) திருவாரூர்
(2) ஆரூர் அரநெறி (3) ஆரூர்ப்பரவையுள் மண்டளி என்பன.

     திருவாரூர்க் கோயில் - தியாகராஜா கோயில், திருமூலட்டானம்,
பூங்கோயில் என்றெல்லாம் சிறப்பிக்கப்படுவது. ஆரூர் அரநெறி என்னும்
கோயில் திருவாரூர்க் கோயிலுக்குள்ளேயே தெற்குச்