பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 637


     சுற்றில் உள்ளது. கீழவீதியில் தேரடியில் உள்ளது ஆரூர்ப்பரவையுள்
மண்டளியாகும். (1) தண்டியடிகள் (2) கழற்சிங்கர் (3) செருத்துணையார்
(4) விறன் மிண்டர் (5) நமிநந்தியடிகள் முதலிய நாயன்மார்களுடைய
திருத்தொண்டுகள் பரிமளித்த பதி இதுவே. கமலை ஞானப்பிரகாசரும்
இங்கிருந்தவரே. இத்தலத்தில் பெருஞ்சிறப்பு தியாகேசருக்குத்தான்.

     இவருக்கு வீதிவிடங்கர், தேவரகண்டப்பெருமான் தியாகப் பெருமான்,
ஆடரவக்கிண்கிணிக்காலழகர், செங்கழுநீரழகர், செவ்வந்தித்தோடகர்,
கம்பிக்காதழகர், தியாகவிநோதர், கருணாகரத் தொண்டைமான், அசைந்தாடும்
அப்பர், அடிக்காயிரம் பொன் வழங்கியவர், கமலேசர், செம்பொன் தியாகர்,
தேவசிந்தாமணி, தியாகசிந்தாமணி முதலாக அறுபதுக்கு மேற்பட்ட பெயர்கள்
(தியாகராஜாவுக்குச்) சொல்லப்பட்டுள்ளன.

     இப்பெருமானுக்குரிய அங்கப்பொருள்களாவன :-

     1) ஆடுதண்டு - மணித்தண்டு
     2) கொடி - தியாகக்கொடி
     3) ஆசனம் - இரத்தின சிம்மாசனம்
     4) மாலை - செங்கழுநீர்மாலை
     5) வாள் - வீரகண்டயம்
     6) நடனம் - அஜபா நடனம்
     7) யானை - ஐராவணம்
     8) மலை - அரதன சிருங்கம்
     9) முரசு - பஞ்சமுக வாத்தியம்
     10) நாதஸ்வரம் - பாரி
     11) மத்தளம் - சுத்தமத்தளம்
     12) குதிரை - வேதம்
     13) நாடு - சோழநாடு
     14) ஊர் - திருவாரூர்
     15) ஆறு - காவிரி
     16) பண் - பதினெண்வகைப்பண் - என்பன.

     சாயரட்சை பூஜையின்போது தேவேந்திரனே வந்து பெருமானைப்
பூசிப்பதாக ஐதிகமாதலால் அர்ச்சகர் நீண்ட அங்கி, தலைப்பாகை
அணிந்துதான் எதிரில் நின்று பூசை செய்கின்றார். சப்த விடங்கத்