பக்கம் எண் :

64 திருமுறைத்தலங்கள்


     இத்தலத்திற்குப் பக்கத்தில் ‘கோவிந்தவாடி’  என்னும்  ஊர்  உள்ளது.
இங்குள்ள தட்சிணாமூர்த்தி மிக்க அழகும் சிறப்பும் உடையதாகும். கட்டாயம்
தரிசிக்க வேண்டும்.

    “ஊறியார் தருநஞ்சினை உண்டு உமை
     நீறுசேர் திருமேனியர்
     சேறுசேர் வயல் தென்திரு மாற்பேற்றின்
     மாறிலா மணி கண்டரே.”

     “குருந்தவன் குருகவன் கூர்மையவன்
     பெருந்தகை பெண்ணவன் ஆணுமவன்
     கருந் தடமலர்க் கண்ணி காதல் செய்யும்
     மருந்தவன் வளநகர் மாற்பேறே.”         (சம்பந்தர்)

     “துணி வண்ணச் சுடராழி கொள்வான் எண்ணி
     அணி வண்ணத்து அலர்கொண்டு அடி அர்ச்சித்த
     மணி வண்ணற்கு அருள் செய்தவன் மாற்பேறு
     பணி வண்ணத்தவர்க்கு இல்லையாம் பாவமே.”

     “ஐயனே அரனே என்று அரற்றினால்
     உய்யலாம் உலகத்தவர் பேணுவர்
     செய்யபாதம் இரண்டும் நினையவே
     வையம் ஆளவும் வைப்பர் மாற்பேறரே.”   (அப்பர்)

     “சலமுடைய சலந்தரன்தன் உடல்தடிந்த நல்லாழி
     நலமுடைய நாரணற்கு அன்று அருளியவாறு என்னேடீ
          நலமுடைய நாரணன்தன் நயனம் இடந்து அரனடிக்கீழ்
         அலராக இடஆழி அருளினன்காண் சாழலோ.
                                (திருச்சாழல் : மாணிக்கவாசகர்)

     “பங்கயம் ஆயிரம் பூவினில் ஓர் பூக் குறையத்
     தம் கண் இடந்து அரன் சேவடிமேற் சாத்தலுமே
     சங்கரன் எம்பிரான் சக்கரம் மாற்கு அருளியவா(று)
     எங்கும் பரவி நாம் தோணோக்கம் ஆடாமோ.”
                             (தோணோக்கம் : மாணிக்கவாசகர்)

     காற்பேறு கச்சியின் முக்காற்பேறு இவன் என்னும்
     மாற்பேற்றின் அன்பர் மனோ பலமே.
                                              (அருட்பா)