அஞ்சல் முகவரி :- அ/மி. மணிகண்டேஸ்வரர் திருக்கோயில் திருமால்பூர் & அஞ்சல் - 631 053 அரக்கோணம் வட்டம் வேலூர் மாவட்டம்.  தொண்டை நாட்டுத் தலம். மக்கள் வழக்கில் தக்கோலம் என்று வழங்கப்படுகிறது. சென்னையிலிருந்தும் காஞ்சிபுரத்திலிருந்தும் நேர்ப் பேருந்து வசதி உள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து 30 கி.மீ. இருப்புப்பாதை நிலையம். ஊருக்குப் பக்கத்தில் கல்லாறு ஓடுகிறது. தக்கன் தலையைக் கொய்த தலம் என்பர். தக்கன் தனக்கு அழிவு வரும் நிலையைக் கண்டு ஓலமிட்டதால் ‘தக்கன்- ஓலம்’ - இப்பதி ‘தக்கோலம்’ என்று பெயர் பெற்றதாக உள்ளூர்ச் செய்தி அறிவிக்கின்றது. இதற்கு அரண் |