பக்கம் எண் :

66 திருமுறைத்தலங்கள்


செய்வதுபோல தேரடிக்கு அருகில் வீரபத்திரர் கோயில் உள்ளது. சம்பந்தர்
பாடல் பெற்றது.

     இறைவன் - ஜலநாதேஸ்வரர், உமாபதீசர்
     இறைவி - கிரிராஜ கன்னிகை, மோகனவல்லி
     தீர்த்தம் - நந்தி தீர்த்தம், பக்கத்தில் கல்லாறு ஓடுகிறது.

     கோயில் ராஜகோபுரம்  மூன்று  நிலைகளையுடையது.  கோபுரத்தின்
பலவகைச் சிற்பங்கள் உள்ளன. இவற்றுள் மார்க்கண்டேயருக்காக இறைவன்
இயமனை உதைத்தருளும் காட்சியும் சிற்பமாகவுள்ளது - காணத்தக்கது.

     கோபுரவாயில் நுழைந்ததும் வெளிப்பிராகாரத்தில் விநாயகர் சந்நிதி
தனிக்கோயிலாகவுள்ளது. பக்கத்தில் தீர்த்தக்குளம் உள்ளது. செம்மையான
நிலையில் இல்லை.

     சுவாமி சந்நிதி எதிரில் சாளரம் உள்ளது. வெளியில் கொடிமரம் நந்தி
பலிபீடங்கள் உள்ளன.  பக்கவாயில்  வழியாக  நுழைந்து  துவார கணபதி,
சுப்பிரமணியரை  வணங்கிச்  சென்றால்  ஒரு  புறத்தில் நவக்கிரக சந்நிதி
உள்ளது.  அடுத்துள்ள   மண்டபத்தில்   சோமாஸ்கந்தர்,   சந்திரசேகரர்,
பிட்சாடனார் முதலிய உற்சவத் திருமேனிகளும், நடராச சபையும் உள்ளன.

     வாயில் நுழைந்து செல்லின் துவாரபாலகர்களைத் தரிசிக்கலாம். நடனக்
கோலத்தில் மேற்கையை உயர்த்தி   உரிய   முத்திரையோடு   திகழ்கின்ற
அருமையான அமைப்பு.   நேரே மூலவர் தரிசனம். சிவலிங்கத் திருமேனி
பிருதிவி (மணல்) லிங்கம்.  தீண்டாத்திருமேனி. ஆவுடையாருக்கு மட்டுமே
அபிஷேகம். பழமையான மூர்த்தி.

     சந்நிதிக்கு  எதிரில்  ஓரத்தில்  சுரங்கப்பாதை  உள்ளது.  கல்லால்
மூடப்பட்டுள்ளது. உள் பிராகாரத்தில் சுப்பிரமணியர், சம்பந்தர், வல்லபை
விநாயகர், ஆறுமுக சுவாமி முதலிய சந்நிதிகள் உள்ளன.

     கோஷ்ட மூர்த்தங்களாக  விநாயகர்,  தட்சிணாமூர்த்தி,  மகாவிஷ்ணு,
பிரம்மா, விஷ்ணுதுர்க்கை முதலிய மூர்த்தங்கள் உள்ளன. இவற்றுள் துர்க்கை
நீங்கலாக உள்ள மற்ற மூர்த்தங்கள் அனைத்தும்  அமர்ந்த  நிலையிலேயே
உள்ளன. தட்சிணாமூர்த்தி வலக்காலைத்  தொங்க  விட்டு,   இடக்காலைக்
குத்துக்காலிட்டு அபூர்வமாகக் காட்சி  தருகின்றார்.  லிங்கோற்பவரிடத்தில்
உள்ள மகாவிஷ்ணுவும் வலக்காலை  மடித்து  இடக்காலைத் தொங்கவிட்டு,
வலக்கை அபயமாகக் கொண்டு, இடக்கையைத் தொடைமீது வைத்துள்ளார்.
பிரம்மாவும் அமர்ந்த