பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 641


     மங்கண முனிவரால் ஸ்தாபிக்கப்பட்ட பெருமான் உள்ள இடம்.
அடுத்துள்ள கோயில் விசுவகர்மேசம் - கருங்கற் கோயில். அழகான
கொடுங்கைகள், சிற்பக்கலை வாய்ந்த தட்சிணாமூர்த்தி, கணபதி, துர்க்கை,
பிரம்மா முதலிய உருவங்கள் உள.

     வணங்கி, வழியிலுள்ள மூர்த்தங்களைத் தொழுதவாறே சித்தீஸ்வரத்தை
யடையலாம். மேற்கு நோக்கிய சந்நிதி. அடுத்துள்ளது தான் தட்சிணாமூர்த்தி
சந்நிதானம். இங்குத்தான் தருமபுர ஆதீன ஆதிகுரு ஸ்ரீலஸ்ரீ ஞானசம்பந்த
சுவாமிகள் கமலை ஞானப்பிரகாசரைத் தம் குருவாக ஏற்றுக்கொண்டு
உபதேசம் பெற்று சொக்கலிங்கமூர்த்தி பூசையினை ஏற்றுக்கொண்டார்கள்.
வழியிலுள்ள ஏராளமான சந்நிதிகளை வணங்கி, தட்டச்சுற்றி மண்டபம்
அடைந்து வல்லபை விநாயகரைத் தொழுது துவஜஸ்தம்பத்தை யடையலாம்.
கொடிமரத்து விநாயகர் இங்கு “பொற்கம்ப விநாயகர்” என்றழைக்கப்படுகிறார்.
தொழுது மேற்கே திரும்பினால் வன்மீகநாதர் சந்நிதி தோன்றுகின்றது.
இச்சந்நிதிக்குச் செல்லும் வழியில் உள்ள கோபுரம் அழகியான் கோபுரம்
எனப்படும். சுதையாலான துவாரபாலகர்கள், கோபுர வாயிலின் நடுவில்
வடபால் அதிகார நந்தி காட்சி.

     உள்ளே வலமாக வரும்போது பிரதோஷநாயகர், சந்திரசேகரர்,
சோழமன்னன், மாணிக்கவாசகர், திரிபுரசம்ஹாரர், ஐங்கலக்காசு விநாயகர்
(ஐந்து கலம் பொற்காசு கொண்டு ஆக்கப்பட்டவர் என்பது செவிவழிச்
செய்தி) சந்நிதிகளைத் தரிசித்துச் சென்றால் மூலவர் தரிசனம் - வன்மீகநாதர்.
சுவாமியின் வலப்பால் அர்த்த மண்டபத்தில் சோமகுலாம்பிகை சந்நிதி.
அடுத்துள்ளது தியாகராஜா சந்நிதி - எதிரில் நந்தி. மூலாதாரக் கணபதி,
நால்வர், பஞ்சமுகவாத்யம், அறுபத்துமூவர் உற்சவமேனிகள்,
மூலத்திருமேனிகள் ஆகியவை தொழுதவாறே தென்னன் திருவாசல் வழியாகச்
சென்று, தியாகேசப் பெருமானைத் தொழலாம். இரத்தின சிம்மாசனத்தில்
செல்வத்தியாகர் முன்னே இருவாட்படை விளங்க நடுவில் பூச்செண்டு
பொருந்த எழுந்தருளிக்காட்சி தருகிறார்.

     தியாகராசாவின் பக்கத்திலுள்ள அம்மை ‘கொண்டி’ எனப்படுபவள்.
தியாகேசர் சந்நிதியில் வலப்பால் ஒருபீடத்தில் உள்ள பெட்டகத்தில்
வீதிவிடங்கராகிய மரகத சிவலிங்கமூர்த்தி உள்ளார். இவருக்குத் தான்
நாடொறும் காலை மாலை வேளைகளில் அபிஷேகம். தியாகராசாவின் முகம்
மட்டுமே தெரியும். மார்கழி ஆதிரையில் தியாகராசாவின் இடப்பாதத்தையும்,
பங்குனி உத்திரத்தில் வலப்பாதத்தையும்

தலம்-41