கண்டு தரிசிக்கவேண்டும். மற்றைய அங்கங்கள் மூடி வைக்கப் பட்டிருக்கும் - அவை மிகவும் ரகசியமானவை. வரும்போது வாதாபி கணபதியைத் தொழலாம். அடுத்து சஹஸ்ரலிங்கம், பிட்சாடனர், மகாலட்சுமி, துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி, உற்சவ மூர்த்தங்கள் ஆகியவைகளைத் தரிசித்தவாறே வந்து, மந்திர பீடத்தையும் தொழுதல் வேண்டும். நவக்கிரகங்கள் நேர்வரிசையில் உள்ளன. வடக்குப்பிராகாரத்தில் உள்ள ரணவிமோசனேசுவரர் சந்நிதியில் சென்று தொழுதால் ஆறாத புண்கள் ஆறும் ; கடன்கள் நீங்கும், காணிக்கையாக உப்பு கொட்டப்படுகிறது. இக்கோயிலில் இரண்டு சண்டேசுவரர் சந்நிதிகள் உள்ளன. (1) எமசண்டர் - எமனே சண்டராக அமர்ந்திருக்கிறான். (2) ஆதிசண்டர் - (சண்டேஸ்வரர்) சந்திரசேகர் கோயில், பைரவர் சந்நிதி தரிசிக்கத் தக்கது. அம்மையின் கோயில். தேவி நீலோத்பலாம்பாள் (அல்லியங்கோதை) நான்கு திருக்கரங்கள் - இவற்றுள் இடக்கரம், தோழி இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் முருகனின் தலையைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வமைப்பு மிகவும் அற்புதமானது. கமலாலயத்தின் குளத்தின் மத்தியில் உள்ளது யோகாம்பாள் சமேத நாகநாத சுவாமி கோயிலாகும். பிரதோஷ காலத்தில் இங்கு வந்து வழிபடுவது மிகச் சிறந்த பலன்களைத் தரும். திருமுறைப் பாடல்கள், திருவாரூர் மும்மணிக்கோவை, திருவாரூர் நான்மணிமாலை, குறவஞ்சி, பள்ளு, திருவாரூர் உலா, முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகியோரின் கீர்த்தனைகள், கமலாம்பிகைமீது சியாமா சாஸ்திரிகள் பாடியுள்ள நவாவரணக் கிருதிகள் முதலியவைகள் இத்தலத்தைப் பற்றியும் சுவாமி அம்பாளையும் புகழ்ந்து பாடுபவை. பரவையுண்மண்டளி மற்றொரு தலமாகும். இது தேர் நிலைக்கு அருகில் கீழவீதியில் உள்ளது. தனிக்கோயில் - கிழக்கு பார்த்த சந்நிதி. வருணன் அனுப்பிய கடலை சுவறச் செய்த இறைவன் எழுந்தருளியுள்ள தலம். துர்வாச முனிவர் பூசித்தது. இறைவன் - தூவாய்நாதர். மக்கள் இக்கோயிலைத் தூவாநாயனார் கோயில் என்றழைக்கின்றனர். சுந்தரர் பாடல் பெற்றது. இதன் பின்புறம் திருநீலகண்ட நாயனார் கோயிலும், தெற்குச் சந்நிதியில் பரவை நாச்சியார் கோயிலும் உள்ளன. |