பக்கம் எண் :

658 திருமுறைத்தலங்கள்


                          திருப்புகழ்

     
“அயிலார் மைக்கடு விழியார் மட்டைக
         ளயலார் நத்திடு                       விலைமாதர்
     அணைமீதிற் றுயில் பொழுதே தெட்க
         ளவரேவற் செய்து                      தமியேனும்
     மயலாகித்திரி வதுதானற்றிட
         மலமாயைக் குண                       மதுமாற
     மறையால் மிக்கருள் பெறவே யற்புத
          மதுமாலைப் பத                       மருள்வாயே
     கயிலாயப் பதியுடையாருக் கொரு
          பொருளே கட்டளை                    யிடுவோனே
     கடலோடிப்புகு முதுசூர் பொட்டெழ
          கதிர்வேல் விட்டிடு                     திறலோனே
     குயிலாலித்திடு பொழிலே சுற்றிய
         குடவாயிற் பதி                         உறைவோனே
     குறமாதைப் புணர் சதுராவித்தக
          குறையா மெய்த் தவர்                  பெருமானே.

                                - நிலைகொள்
     தடவாயில் வெண்மணிகள் சங்கங்கள் ஈனும்
     குடவாயில் அன்பர் குறிப்பே.”               (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

     அ/மி. கோணேசுவரர் திருக்கோயில்
     குடவாசல் & அஞ்சல் - 612 601
     குடவாசல் வட்டம் - திருவாரூர் மாவட்டம்.

212/95. திருச்சேறை.

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     1) கும்பகோணத்திலிருந்து செல்லலாம். 15 கி.மீ. தொலைவு.
திருவாரூரிலிருந்தும் வரலாம்.

     2) கும்பகோணத்திலிருந்து நகரப் பேருந்து உள்ளது.