“முறியுறு நிறமல்கு முகிழ்முலை மலைமகள் வெருவமுன் வெறியுறு மதகரியதள் படவுரிசெய்த விறலினர் நறியுறும் இதழியின் மலரொடு நதிமதி நகுதலை செறியுறு சடைமுடி அடிகள்தம் வளநகர் சேறையே.” (சம்பந்தர்) “நிறைத்த மாமணலைக் கூப்பி நேசமோடு ஆவின்பாலைக் கறந்து கொண்டாட்டக் கண்டு கறுத்த தன் தாதைதாளை எறித்த மாணிக்கு அப்போதே எழில்கொள் சண்டீசன் என்னச் சிறந்தபேர் அளித்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே.” (அப்பர்) -“மடவாட்கோர் கூறை உவந்தளித்தகோவே யென்றன்பர் தொழச் சேறை உவந்திருந்த சிற்பரமே” (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. செந்நெறியப்பர் திருக்கோயில் திருச்சேறை & அஞ்சல் - 612 605 கும்பகோணம் வட்டம் - தஞ்சை மாவட்டம். சோழநாட்டு (தென்கரை)த் தலம். கும்பகோணம் - குடவாசல் பேருந்துச் சாலையில் திருச்சேறையை அடுத்து இத்தலமுள்ளது. நாலூர், நாலூர்மயானம் என இருதலங்களாக உள்ளது. நாலூர் - வைப்புத்தலம் - நாலூர் மயானந்தான் பாடல் பெற்றது. நாலூர் - பேருந்துச் சாலையில் உள்ளது. இது மாடக்கோயில் நாலூர் மயானம் 1 கி.மீ. உட்புறத்தில் கிழக்கில் உள்ளது. இதுமுதலாம் ஆதித்த சோழன் முதலியோருடைய திருப்பணிகள் பெற்றது. சோழர் காலத்தில் சதுர்வேதி மங்கலமாக இருந்த ஊர். தமிழில் ‘நால்வேதியூர்’ என்று வழங்கத் தொடங்கி நாலூர் என்று மருவியிருக்கலாம் என்கின்றனர். |