பக்கம் எண் :

664 திருமுறைத்தலங்கள்


215/98. இரும்பூளை

ஆலங்குடி

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     மக்கள் வழக்கில் ஆலங்குடி என்று வழங்குகிறது.

     கும்பகோணம் - நீடாமங்கலம் சாலையில் உள்ள ஊர். பேருந்து வசதி
உள்ளது. பூளை என்னும் செடியைத் தலவிருட்சமாக உடையதாதலின்
இரும்பூளை எனப்பெயர் பெற்றது.

     திருமுறைத் தலங்கள்

     இறைவன் - காசிஆரண்யேஸ்வரர், ஆபத்சகாயேஸ்வரர்.
     இறைவி - ஏலவார்குழலி. இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி விசேஷம்
               இதைத் தட்சிணாமூர்த்தித் தலம் என்பர்.
     தீர்த்தம் - அமிர்த புஷ்கரணி மற்றும் உள்ள தீர்த்தங்கள்.