பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 671


அஞ்சல் முகவரி:-
     அ/மி. சாட்சிநாதர் திருக்கோயில்
     அவளிவணல்லூர் - ஹரித்வார மங்கலம் அஞ்சல் 612 802
     கும்பகோணம் வட்டம் - தஞ்சை மாவட்டம்.

218/101. பரிதிநியமம்

பருத்தியப்பர் கோயில், பரிதியப்பர் கோயில்.

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     மக்கள் ‘பருத்தியப்பர்’ கோயில் என்றழைக்கின்றனர்.

     (1) தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை பேருந்துச் சாலையில் மேல உளூர்
(உழவூர்) சென்று அங்கிருந்து 2 கி.மீ.ல் உள்ள இத்தலத்தையடையலாம்.
வழியில் கோயில் வளைவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சாலையின்
பக்கத்தில் கோயில் உள்ளது.

     (2) தஞ்சையிலிருந்து மாரியம்மன் கோயில் வழியாகவும், மன்னார்குடிச்
சாலை சடையார் கோயில் பொன்றாப்பூர் வழியாகவும் நகரப் பேருந்து
செல்கிறது.