பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 673


     “கண்டியூர் வேதிகுடி கற்குடந்தைக் கீழ்க்கோட்டம்
     பண்பரிதி நன்நியமம் பாங்கார் தெளிச்சேரி
     பொற்புறவார் பனங்காட்டூர் நெல்லிக்கா ஏழும்
     பொற் பரிதி பூசனை ஊர்.”                (தனிப்பாடல்)

     “விண் கொண்ட தூமதி சூடி நீடுவிரிபுன்
          சடைதாழப்
     பெண் கொண்ட மார்பில் வெண்ணீறு பூசிப்
          பேணார் பலிதேர்ந்து
     கண் கொண்ட சாய லொடேர் கவர்ந்த
          களவர்க் கிடம் போலும்
     பண் கொண்ட வண்டினம் பாடியாடும்
          பரிதின் நியமமே.”               (சம்பந்தர்)

                                - “கோதகன்ற
     நீட்டுங் கருதி நியமத்தோர்க்கு இன்னருளை
     நீட்டும் பருதி நியமத்தோய்.”           (அருட்பா)

அஞ்சல் முகவரி:-

     அ/மி. பாஸ்கரேஸ்வரர் / பரிதியப்பர் திருக்கோயில்
     பருத்தியப்பர் கோயில்
     மேலவுளூர் அஞ்சல் (MELAVULUR)
     தஞ்சை RMS. 614 904.

219/102. வெண்ணி.

கோயில் வெண்ணி.

     சோழ நாட்டு (தென்கரை)த் தலம்.

     (1) தஞ்சை - நீடாமங்கலம் (2) தஞ்சை - திருவாரூர் பேருந்துச்
சாலையில் சாலியமங்கலத்தைக் கடந்து, ‘கோயில்வெண்ணி’ நிறுத்தத்தில்
(Stop) இறங்கி, இடப்புறமாகச் சாலையில் 1/2 கி.மீ. சென்றால் கோயிலை
அடையலாம். ஊர் சாலையின் வலப்புறம் உள்ளது.

தலம் - 43