பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 679


221/104. பாதாளேச்சுரம்

பாமணி

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     மக்கள் வழக்கில் ‘பாமணி’ என்று வழங்குகிறது. மன்னார்குடிக்குப்
பக்கத்தில் 2 கி.மீ.ல் உள்ள ஊர். டவுன் பஸ் செல்லுகிறது.
மன்னார்குடியிலிருந்து பாமணிக்குச் செல்லும் சாலையில் சென்று, பாமணியை
அடைந்து, அங்குள்ள உரத் தொழிற்சாலையை ஒட்டிய சாலையில் சென்றால்
கோயிலையடையலாம். கோயில் வரை வாகனங்கள் செல்லும். பாம்பணி -
சர்ப்பபுரம் என்பன இதன் வேறு பெயர்கள். பாம்பணி - என்பது மருவி
இன்று ‘பாமணி’யாயிற்று. பாதாளத்திலிருந்து ஆதிசேஷன் வெளிப்பட்டு
(தனஞ்சய முனிவராய்)