பக்கம் எண் :

68 திருமுறைத்தலங்கள்


                           -ஏற்புடையாய்
     ஊறல் அடியார் உறத் தொழுது மேவு திரு
     வூறல் அழியா உவகையே. -அருட்பா


அஞ்சல் முகவரி :-

    அ/மி. ஜலநாதேஸ்வரர் திருக்கோயில்
     தக்கோலம் & அஞ்சல் - 631 151
     அரக்கோணம் வட்டம்.
     வேலூர் மாவட்டம்.

13. இலம்பையங் கோட்டூர்

எலுமியன் கோட்டூர்.

    
     தொண்டை நாட்டுத் தலம்.

     சிறிய ஊர். மக்களின் பேச்சு வழக்கில், ‘எலுமியன்கோட்டூர்’ என்று
வழங்குகிறது. (1) திருவிற்கோலம் எனப்படும்  ‘கூவம்’  சென்று  தரிசித்த
பின்னர் அங்கிருந்து கூவம் ஏரியுள் இறங்கி 3 கி.மீ. நடந்தால் ஆற்றின்
மறுகரையிலுள்ள இத்திருக்கோயிலை அடையலாம். (2) சென்னையிலிருந்தும்,
காஞ்சியிலிருந்தும் ‘செல்லம்பட்டிடை’ செல்லும் நகரப் பேருந்தில் சென்று,
செல்லம்பட்டிடையில்  இறங்கினால்    அங்கிருந்து  1 கி.மீ-ல்  உள்ள
இத்திருக்கோயிலை அடையலாம். இவ்வழியில்  சென்றால்  கோயில்வரை
காரில் செல்லலாம். நல்ல பாதை உள்ளது. ஊரில் உணவு முதலியவற்றிற்கு
எவ்வித வசதியுமில்லை. அரம்பை முதலானோர் வழிபட்ட தலம். ரம்பையங்
கோட்டூர் என்பதே இலம்பையங் கோட்டூர் என்றாயிற்று என்பர்.

     ஞானசம்பந்தர் இப்பக்கத்தே வருங்காலத்து, இறைவன் ஒருசிறு பிள்ளை
போலவும், பின் ஒரு முதியவர் போலவும் வழிமறித்து இக்கோயிலை உணர்த்த,
உடன் வந்த அடியார்கள் உணர்ந்து கொள்ளவில்லையாம். பின்பு வெள்ளைப்
பசு வடிவில் வந்து ஞானசம்பந்தரின் சிவியை முட்டிநிற்க, அப்போது சம்பந்தர்
வியந்து அப்பசு காட்டிய குறிப்பின் வழி செல்ல, தலத்தினருகில் வந்ததும் பசு
மறைந்ததாம். அப்போதுதான் இறைவனே வந்து உணர்த்தியதை