“நிறைவெண் திங்கள் வாண் முக மாதர் பாட நீள்சடைக் குறைவெண் திங்கள் சூடியோர் ஆடல் மேய கொள்கையான் சிறைவண்டி யாழ் செய் பைம் பொழிற் பழனஞ் சூழ் சிற்றேமத்தான் இறைவன் என்றே உலகெலாம் ஏத்த நின்ற பெருமானே.” (சம்பந்தர்) - “மேன்மைதரும் முற்றேமம் வாய்ந்த முனிவர் தினம்பரவும் சிற்றேமம் வாய்ந்த செழுங்கதிரே” (அருட்பா) அஞ்சல் முகவரி:- அ/மி. சுவர்ணஸ்தாபனேஸ்வரர் திருக்கோயில் சித்தாய்மூர் & அஞ்சல். பொன்னிறை - S.o. திருவாரூர் வட்டம் - திருவாரூர் மாவட்டம் 610 203. 224/107. திருவுசாத்தானம் கோயிலூர் / கோவிலூர் | சோழநாட்டு (தென்கரை)த் தலம். மக்கள் கோயிலூர் என்றழைக்கின்றனர். கோயிலூர் என்ற பெயரில் பலவூர்களிருப்பதாலும், இவ்வூர் முத்துபேட்டைக்கு அருகில் இருப்பதாலும் வழக்கில் இத்தலம் ‘முத்துப் பேட்டை - கோயிலூர்’ என்று வழங்கப்படுகிறது. தஞ்சை, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை முதலிய பலவூர்களிலிருந்து முத்துப்பேட்டைக்குப் பேருந்துகள் உள்ளன. முத்துப்பேட்டையிலிருந்து மன்னார்குடி சாலையில் 2 கி.மீ. சென்றால் சாலையிலேயே கோயிலின் வளைவு ஸ்ரீ மந்திரபுரீஸ்வரர் தேவஸ்தானம் என்று உள்ளது. அதனுள் நுழைந்து சென்றால் கோயிலை அடையலாம். இறைவன் - மந்திரபுரீஸ்வரர் இறைவி - பிருகந்நாயகி, பெரியநாயகி தலமரம் - மா |