பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 699


     “தளரொளி மணிப்பூம் பதஞ் சிலம் பலம்பச்
          சடைவிரித் தலையெறி கங்கைத்
     தெளிரொளி மணிநீர்த் திவலை முத்தரும்பித்
          திருமுக மலர்ந்து சொட்டட்டக்
     கிளரொளி மணி வண்டறை பொழிற் பழனங்
          கெழுவு கம்பலை செய்கீழ்க் கோட்டூர்
     வளரொளி மணியம் பலத்துள் நின்றாடும்
          மைந்தனென் மனங் கலந்தானே.”
                       (திருவிசைப்பா) - கருவூர்த்தேவர்

                                        - “கொண்டலென
     மன்கோட்டூர் சோலை வளர் கோட்டூர் தண்பழனத்
     தென்கோட்டூர் தேவ சிகாமணியே”       (அருட்பா)


அஞ்சல் முகவரி:-

     அ/மி. கொழுந்தீஸ்வரர் திருக்கோயில்
     கோட்டூர் & அஞ்சல்
     (வழி) மன்னார்குடி - மன்னார்குடி வட்டம்
     திருவாரூர் மாவட்டம் - 614 708.

229/112. திருவெண்டுறை

வண்டுதுறை

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     மக்கள் வழக்கில் ‘வண்டுதுறை’ என்று வழங்குகிறது.

     1. மன்னார்குடி - வீராக்கி செல்லும் நகரப் பேருந்துகள் வண்டுதுறை
வழியாகச் செல்கின்றன.
     2. மன்னார்குடி - சேந்தங்குடி செல்லும் நகரப் பேருந்துகள் வண்டுதுறை
வழியாகச் செல்கின்றன.
     3. திருத்துறைப்பூண்டியிலிருந்து மன்னார்குடிக்குப் போகும் சாலையில் ‘வீராக்கி’ என்று வழிகாட்டிக்கல் உள்ள இடத்தில் பிரியும் சாலையில் சென்று இத்தலத்தையடையலாம். நல்ல சாலை.