சந்நிதிகள் உள்ளன. சண்டேஸ்வரர் சந்நிதி உள்ளது. உள்நுழைந்தால் நேரே மூலவர் தரிசனம். வலப்பால் முதலில் அம்பாளும் அடுத்து நடராசரும் தெற்கு நோக்கியுள்ளனர். அம்பாள் நின்ற கோலம். சுவாமி - மூலவர் - தீண்டாத் திருமேனி. கிழக்கு நோக்கிய சந்நிதி. சுவாமிமீது உருத்திராக்க மாலை சார்த்தப்பட்டுள்ளது. சிவலிங்கத் திருமேனி வெளிர் நிறமுடைய செம்மண் நிறத்தில் உள்ளது. பெரிய ஆவுடையார் - அடிப்பாகம் பத்மம் போன்ற அமைப்பில் உள்ளது. கூவத்தில் உள்ள குருக்களே இக்கோயில் முறைக்கும் உரியவர். எனவே கூவம் சென்று வருபவர்கள் குருக்களையும் உடனழைத்து வருதல் வேண்டும். வேறு வழியில் வருவோர் அக்குருக்களுக்கு முன்பே தங்கள் வருகையைத் தெரிவித்து அவரைக் கோயிலுக்கு வருமாறு செய்தல் வேண்டும். ஒரு வேளை பூஜை மட்டுமே நடைபெறுகின்றது. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன்விழாத் திட்டத்தின் கீழ் திருப்பணிகள் செய்யப்பட்டு விமானங்கள் பழுதுபார்க்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. சிறிய கோயிலாயினும் கற்றளி செம்மையாகவுள்ளது. இத்தலத்துப் பதிகத்தில்தான் ஞானசம்பந்தர் “எனதுரை தனதுரையாக” என்ற தொடரை, பாடல் தொறும் அமைத்துப் பாடியுள்ளார். மலையினார் பருப்பதம் துருத்தி மாற்பேறு மாசிலாச்சீர் மறைக்காடு நெய்த்தானம் நிலையினான் எனதுரை தனதுரையாக நீறுஅணிந்து ஏறுஉகந்து ஏறியநிமலன் கலையினார் மடப்பிணை துணையொடுந் துயிலக் கானல் அம்பெடை புல்கிக் கணமயிலாலும் இலையினார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணி என் எழில் கொள்வதியல்வே (சம்பந்தர்) - மாறுபடு தீதும் இலம்பயங்கோட்டீர் என்று அடியார்புகழ் ஓதும் இலம்பயங் கோட்டூர் நலமே. (அருட்பா) |