பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 71


அஞ்சல் முகவரி :-
    
    
அ/மி. அரம்பேஸ்வரர் திருக்கோயில்
     இலம்பயங்கோட்டூர் (எலுமியன்கோட்டூர்)
     கப்பாங்கோட்டூர் அஞ்சல்
     (வழி) எடையார்பாக்கம் - 631 553
     ஸ்ரீ பெரும்புதூர் வட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம்.

14. திருவிற்கோலம்

கூவம்

    தொண்டை நாட்டுத் தலம்.

    தற்போது ‘கூவம்’ என்றழைக்கப்படுகிறது. 1. சென்னையில் இருந்து
நேரே  செல்லப்  பேருந்து  வசதி  உள்ளது. 2. சென்னையில் இருந்து
பெங்களூர், வேலூர், காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் சுங்குவார் சத்திரம்
வந்து, அங்கிருந்து பேரம்பாக்கம் வழியாகத் திருவள்ளூர் செல்லும் கிளைச்
சாலையில் சென்று கூவம் கூட்ரோட்டில்  இறங்கி 1 கி.மீ. (வலப்புறமாக)
நடந்து ஊரையடையலாம். 3. காஞ்சியிலிருந்து சுங்குவார்சத்திரம் வழியாகத்
திருவள்ளூர் செல்லும் பாதையிலும் சென்று கூவம் கூட்ரோட்டில் இறங்கிச்
செல்லலாம். செல்லும் போது  ஊருக்கு அண்மையில் இடப்புறமாக ஒரு
கோயில்  உள்ளது.  இது  தர்க்கமாதா  என்னும்  அம்மன் கோயிலாகும்.
திருவாலங்காட்டு நடராசப் பெருமானுடன்  தர்க்கித்து  நடனமாட, சிலம்பு
முத்துக்கள் வீழ்ந்த இடம் இதுவென்றும் ; இதனால் அம்பாளுக்குத் ‘தர்க்க
மாதா’ என்று பெயர் வந்ததென்றும் சொல்லப்படுகிறது. சிவாலயம் ஊரினுள்
உள்ளது.

     இறைவன், மேருமலையை வில்லாகக் கையில் பிடித்த கோலம் = திரு
+ வில் + கோலம் - தலத்தின் பெயராயிற்று.

     சுவாமி - திரிபுராந்தகேஸ்வரர், திருவிற்கோலநாதர்.

     அம்பாள் - திரிபுராந்தகி, திரிபுரசுந்தரி.
    
     தலமரம் - தனியாக ஏதுமில்லை. (இத்தலமே ‘நைமிசாரண்ய
க்ஷேத்திரம் எனப்படுகிறது.)

     தீர்த்தம் - அக்கினி தீர்த்தம். இது கோயிலுக்கு எதிரில் உள்ளது.
- சம்பந்தர் பாடல் பெற்றது.