பக்கம் எண் :

72 திருமுறைத்தலங்கள்


     இதற்கு  ‘அச்சிறுகேணி’  என்றும்,  கூபாக்கினி  தீர்த்தம்   என்றும்
பெயர்களுண்டு. இக்குளத்தில் தவளைகளே இல்லை. சுற்றிலும் வயல்வெளிகள்
இருந்தும்  இக்குளத்தில்  தவளைகள்  இல்லை.  பிடித்து  வந்து விட்டாலும்
வெளியேறிவிடுமாம்.  இக் குளத்தில்  மூழ்கி இறைவனை வழிபடுவோர்க்குப்
புத்திரப்பேறு  கிடைக்கும்  என்று  சொல்லப்படுகிறது. சித்திரைத் திங்களில்
பத்து    நாட்களுக்குப்    பெருவிழா   முறையாக      நடைபெறுகின்றது.

     கோயிலுக்கு ராஜகோபுரமில்லை. முகப்பு வாயில் மட்டுமே உள்ளது-
தெற்குநோக்கிய முகப்பு வாயிலின் முன்புறத்தில் ஒரு பக்கம் விநாயகரும்
மறுபக்கம் முருகனும் காட்சி தருகின்றனர். விசாலமான உள்ளிடம், வெளிப்
பிராகாரத்தில்  சந்நிதிகள்  ஏதுமில்லை. வலமாக வந்து உள் நுழைந்தால்
நேரே நடராசர் சந்நிதி, உள் பிராகாரத்தில் வலம் வரும்போது விநாயகர்
சந்நிதி உள்ளது. மூன்று திருமேனிகள் உள்ளன - இவர் பெயர் ‘அச்சிறுத்த
விநாயகர்’   கோஷ்டமூர்த்தமாக   விநாயகர்  உள்ளார்.   அடுத்துள்ள
தக்ஷிணாமூர்த்தி   அழகாக   உள்ளார்.   கருவறையின்    பின்புறத்தில்'
இலிங்கோற்பவர்,   அடுத்து  பிரம்மா,  துர்க்கை முதலிய சந்நிதிகள் உள.
சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளது. பிராகாரத்தில் முருகப்பெருமான் சந்நிதி
உரிய இடத்தில் இல்லாமல்  இடம்  மாறி,   இலிங்கோற்பவருக்கு  நேரே
உள்ளது. பக்கத்தில் பாலமுருகன் சந்நிதியும் அடுத்து மீனாட்சி சுந்தரேஸ்வரர்
சந்நிதியும் உள்ளன. துர்க்கை சந்நிதிக்கு எதிரில் சந்தன மேடை உள்ளது.
இதில் அரைத்த சந்தனம் சுவாமிக்குச் சார்த்தப்படுகிறது.

 

     பைரவர் சந்நிதி, தனிக் கோயிலாக விளங்குகிறது. பைரவர் சந்நிதியில்
நாய் இல்லை.  இதற்காகச்  சொல்லப்படுகின்ற  செவிவழிச்  செய்தியாவது"
:திரிபுரசம்ஹார  காலத்தில்  பைரவர்  சென்று  தேவர்கள் அனைவரையும்
அழைத்து  வந்ததாகவும்   அப்போது  அவர்  வாகனமாகிய  நாய் வழி தவறிவிட்டதென்றும்  அதனால்  இங்கு பைரவருக்கு நாய் வாகனமில்லை
யென்றும் ஒரு செய்தி செவிவழிச் செய்தியாகச் சொல்லப்படுகிறது. பைரவர்
கோயில் விமானத்தில் ‘நாய்’  சிற்பங்கள்  பல,  சுதையால்   அமைக்கப்
பட்டுள்ளன. வலம் முடித்து உள்ளே செல்லும் போது எதிரில் நடராசர்
காட்சி தருகின்றார்.   காளிக்கு    இப்பெருமான்    அருள்புரிந்ததால்  
இந்நடனம் ‘ரக்ஷாநடனம்’  எனப்படுகின்றது.  காளிக்கு  அருள்  புரிந்த
நிகழ்ச்சி இன்றும் பெருவிழாவில் பத்தாம்  நாளில்  நடைபெறுகின்றதாம்.
ஆண்டில், உரிய 6 நாள்களிலும் நடராசாவுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.
திருவாதிரையிலும், பெருவிழாவில் பத்தாம் நாளிலும் ஆக ஆண்டுக்கு
இருமுறை நடராஜா