பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 701


                                     - “தென்கூட்டிப்
     போய் வண்டுறை தடமும் பூம்பொழிலும் சூழ்ந்தமர்
     ஆய் வெண்டுறை மாசிலாமணியே.”           (அருட்பா)


அஞ்சல் முகவரி:-

     அ/மி. வெண்டுறைநாதர் திருக்கோயில்
     அ/மி. மதுவனேஸ்வரர் திருக்கோயில்
     வண்டுதுறை & அஞ்சல் - 614 717.
     ஆதிச்சபுரம் S.O.
     மன்னார்குடி வட்டம் - திருவாரூர் மாவட்டம்.

230/113. கொள்ளம்பூதூர்

திருக்களம்புதூர், திருக்களம்பூர்.

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     கும்பகோணம் வழியாகக் குடவாசல் செல்லும் பேருந்தில் சென்று
கொள்ளம்பூதூரை அடையலாம். ஊருக்குப் பக்கத்தில் முள்ளியாறு எனப்படும்
வெட்டாறு ஓடுகின்றது. இது அகத்திய காவேரி எனப்படும். இவ்வாற்றின்
எதிர்க்கரையில் ஞானசம்பந்தர் கோயில் உள்ளது. இக்கோயிலை ‘நம்பர்
கோயில்’ என்றழைக்கின்றனர். நம்பர் என்பது ஞானசம்பந்தரைக் குறிக்கும்.

     இவ்வாற்றில்தான் ஞானசம்பந்தர், அடியவரோடு ஓடம் ஏறிப் பதிகம்
பாடிச் செலுத்தி மறுகரையைச் சேர்ந்த அற்புதம் நிகழ்ந்தது. (இந்த ஆற்றை
ஓடம் போக்கி ஆறு என்றும் மக்கள் வழங்குகின்றனர்) ஞான சம்பந்தர்,
பாண்டிய நாட்டில் சைவம் தழைக்கச் செய்து, சோழ நாட்டில்
கொள்ளம்பூதூருக்கு வருகைதந்தபோது முள்ளியாற்றில் வெள்ளம்
போய்க்கொண்டிருந்தது. ஓடஞ்செலுத்த முடியாமையால் ஓடக்காரர்கள்
தங்கள் ஓடங்களைக் கரையில் நிறுத்திவிட்டுப் போயிருந்தனர். அங்கு வந்த
ஞானசம்பந்தர் அவ் ஓடங்களுள் ஒன்றினை அவிழ்த்து நாவினையே ஓடக்
கோலாகக் கொண்டு