பக்கம் எண் :

704 திருமுறைத்தலங்கள்


     என்றும் குறிக்கப்பட்டுள்ளனர். ஆலயத்தில் நந்தா விளக்கெரிக்கவும்,
நாள் வழிபாட்டுக்கும் நிவந்தங்கள் விட்ட செய்திகளை இக்கல்வெட்டுக்கள்
தெரிவிக்கின்றன.

     இத்தலம் கல்வெட்டில் ‘அருமொழிதேவ வளநாட்டுச் சோற்றூர்க்
கூற்றத்துத் திருக்கொள்ளம்பூதூர்’ என்று குறிக்கப்பட்டுள்ளது.

    “கொட்டமே கமழும் கொள்ளம் பூதூர்
     நட்டமாடிய நம்பனையுள்கச்
     செல்லவுந்துக சிந்தையார் தொழ
     நல்குமாறருள் நம்பனே”

     “கொன்றைசேர் சடையான் கொள்ளம் பூதூர்
     நன்று காழியுன் ஞானசம்பந்தன்
     இன்று சொன்மாலை கொண்டேத்த வல்லார் போய்
     என்றும் வானவரோடு இருப்பாரே”    (சம்பந்தர்)

     “தேவர் பிரான் அமர்ந்த திருக்கொள்ளம்பூதூர்
          எதிர்தோன்றத் திருவுள்ளம் பணியச் சென்று
     மேவுதலால் ஓடங்கள் விடுவார் இன்றி
          ஒழிந்திடவும் மிக்கதோர் விரைவார் சண்பைக
     காவலனார் ஓடத்தின் கட்டவிழ்த்துக்
          கண்ணுதலான் திருத்தொண்டர் தம்மை யேற்றி
     ‘நாவலமே கோலாக’ அதன் மேல்நின்று
          நம்பர்தமைக் ‘கொட்டமே’ நவின்று பாட” (பெ.புரா)

               
    வில்வவனேசர் துதி

     “சீர்கொண்ட ஒருகோடிப் பரிதியென ஒளிவிரிக்கும்
                                         செவ்வியானைப்
     பார்கொண்ட மணிச்சுடிகைப் பன்னகப்பொற் பணியானைப்
                                     பசுந்தேன் நல்கும்
     தார்கொண்ட தண்துளபத் திருமாலும் சதுர்முகனும் தாழ்ந்து
                                     போற்றக்
     கார்கொண்ட முகத்தானை வில்வவனப் பெருமானைக் கருத்துள்
                                      வைப்பாம்.”
                                           (தலப்பாடல்)