வெண்ணிலாக்கண்ணி “வில்வவனமேவு நாதர் வெண்ணிலாவே - எங்கள் விமலர்தமை ஏத்துவம் வா வெண்ணிலாவே நம்பர்பதம் அபயமென வெண்ணிலாவே - நீதான் நண்ணியுற்ற நலமறிந்தோம் வெண்ணிலாவே. நாட்டுக்கெலாம் நம்பனென வெண்ணிலாவே - அந்த நம்பனுறை கொள்ளம் பூதூர் வெண்ணிலாவே.” (கொள்ளம்பூதூர் வைத்தியலிங்க முதலியார் பாடியது) - ‘தோய்வுண்ட கள்ளம்பூதாதி நிலைகண்டு உணர்வு கொண்டவர்சூழ் கொள்ளம்பூதூர் வான்குல மணியே’ (அருட்பா) அஞ்சல் முகவரி:- அ/மி. வில்வாரண்யேசுவரர் திருக்கோயில் திருக்களம்பூர் - 622 414 திருவாரூர் மாவட்டம்.
231/114. பேரெயில் ஓகைப்பேரையூர் - வங்காரப்பேரையூர் | சோழநாட்டு (தென்கரை)த் தலம். பேரையூர் என்ற பெயரில் பலவூர்களிருப்பதால் மக்கள் இப்பதியை ஓகைப்பேரையூர் என்று வழங்குகின்றனர். வங்காரப் பேரையூர் என்ற பெயரும் வழங்குகிறது. 1) திருவாரூர் - மன்னார்குடிச் சாலையில் கமலாபுரம் அடுத்த மூலங்குடி வந்து அங்கிருந்து இத்தலத்தையடையலாம். 2) மாவூர்ரோடு - வடபாதி மங்கலம் சாலை வழியாகவும் இத்தலத்திற்கு வரலாம். தலம் - 45 |