பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 711


                                    - நீட்டுமொளி
     ஆங்கூரிலை வேலவனாதியர் சூழத்
     தேங்கூரில் வாழ் தேவ சிங்கமே”     (அருட்பா)

அஞ்சல் முகவரி:-

     அருள்மிகு. ராஜதகீரீஸ்வரர் தேவஸ்தானம்
     அருள்மிகு. வெள்ளிமலைநாதர் திருக்கோயில்
     திருத்தங்கூர் - திருநெல்லிக்காவல் அஞ்சல் - 610205
     திருத்துறைப்பூண்டி வட்டம் - திருவாரூர் மாவட்டம்.

234/117. திருநெல்லிக்கா

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     நெல்லி மரங்கள் அடர்ந்த சோலையாக இவ்விடம் இருந்தமையின்
இப்பெயர் பெற்றது.

     1) திருவாரூர் - திருத்துறைப்பூண்டி இருப்புப்பாதையில் உள்ள
புகைவண்டி நிலையம். இருப்புப்பாதை நிலையத்திலிருந்து ஊர் சற்று
உள்ளடங்கியுள்ளது.

     2) திருவாரூர் - திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில், திருவாரூரை
அடுத்து, 14 ஆவது கி.மீ.-ல் ‘திருநெல்லிக்கா’ என்று வழிகாட்டிக் கல் உள்ள
இடத்தில் பிரியும் சாலையில் சென்று, ‘புதூர்’ ஊரையடைந்து, அதைத் தாண்டி
திருநெல்லிக்காவல் ‘ரயில்வேகேட்’டையும் கடந்து, திருநெல்லிக்காவல்
ஊரையடையலாம். கோயில் ஊர்க்கோடியில் உள்ளது. கோயில்வரை பேருந்து
செல்லும், நல்ல பாதை.

     3) திருவாரூரிலிருந்து இத்தலத்திற்கு நகரப் பேருந்து வசதியுள்ளது.
சிறிய ஊர். நெல்லிக்காவல், ஆம்லகவனம் என்பன இத் தலத்திற்குரிய
பெயர்கள். ‘பஞ்சகூடபுரம்’ என்று சொல்லப்படும் ஐந்து தலங்களுள் ஒன்று.
ஏனையவை (1) நாட்டியத்தான் சூடி, (2) காறாயில் (3) திருத்தெங்கூர்
(4) நமசிவாயபுரம் என்பன.

     இத்தலம் சூரியன், பிரமன், திருமால், சந்திரன், சனி, கந்தர்வர்,
துர்வாசர் ஆகியோர் வழிபட்ட சிறப்புடையது. இத்தலத்தில்தான் இறைவன்
துர்வாசருக்கு கோபத்தை நீக்கியருளினார் என்பர்.