சூரியன் வழிபட்டதால் அருணபுரம் என்றும்; பிரமன் தீர்த்தமுண்டாக்கி வழிபட்டதனால் பிரமதீர்த்தம் என்றும்; கந்தர்வன் ஒருவனின் குட்ட நோய் நீங்கப் பெற்றதால் குஷ்டரோகஹரம் என்றும்; வழிபடு பயன்கள் எளிதில் பெறத்தக்க தலமாதலின் சர்வஉத்தமபுரம் என்றும்; ஐந்தெழுத்தும் இறைவனை வழிபட்டதால் பட்சாட்சரபுரம் என்றும்; ஐந்து தீர்த்தங்கள் இருப்பதால் பஞ்சதீர்த்தபுரம் என்றும்; இறையருளால் அமுதம் கிடைக்கப்பெற்றதால் அமிர்த வித்யாபுரம் என்றும் இதற்குப் பல பெயர்களுள்ளன. இறைவன் - ஆம்லகவனேஸ்வரர், ஆம்லகேஸ்வரர், நெல்லிவனநாதர், நெல்லி நாதேஸ்வரர். இறைவி - ஆம்லகேஸ்வரி, மங்களநாயகி தலமரம் - நெல்லிமரம் தீர்த்தம் - கோயில் எதிரில் உள்ளது பிரமதீர்த்தம். வடபால் உள்ளது ரோகநிவாரண தீர்த்தம் (சூரிய தீர்த்தம்) பிரமதீர்த்தக்கரையில் படித்துறை விநாயகர் உள்ளார். சம்பந்தர் பாடல் பெற்றது. கோயில் வயல்களுக்கு மத்தியில் உள்ளது. மேற்கு நோக்கிய திருக்கோயில் கவசமிட்ட கொடிமரத்தையும், விநாயகரையும் பணிந்து செல்லும் நம்மை ஐந்து நிலைகளையுடைய ராசகோபுரம் அழைக்கின்றது. பிராகாரத்தில் நால்வர், கஜலட்சுமி, விநாயகர், வள்ளி தெய்வயானை சுப்பிரமணியர், சனிபகவான், தலமரம், நெல்லி, மரத்தினடியில் நெல்லிவன நாதர், பைரவர், நவக்கிரகங்கள் முதலிய சந்நிதிகள் உள்ளன. வலம்முடித்துப் டிகளேறி முன்மண்டபத்தை அடைந்தால் இடப்பால் சோமாஸ்கந்தர் தரிசனம். நேரே நடராசசபை உள்ளது. இருபுறத்திலும் உற்சவத் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தில் மேற்புறத்தில் நவக்கிரகங்கள், பன்னிரு ராசிகள், தசாவதாரங்கள் முதலிய தீட்டப்பட்டுள்ளன. மூலவர் திருமேனி - மேற்கு நோக்கிய காட்சி. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை சந்நிதிகளும் உள்ளன. சண்டேசுவரர் உள்ளார். அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. நின்ற திருக்கோலம். சோழர் காலத்திய கல்வெட்டுக்களில் இத்தலம் இராஜேந்திரசோழ வளநாட்டு, அருவாள கூற்றத்து நெல்லிக்கா என்றும் ; இறைவன் பெயர் நெல்லிக்கா உடையார், ஆம்லகேஸ்வரர் எனவும் குறிக்கப்பட்டுள்ளன. இராசராச தேவன் |