பக்கம் எண் :

714 திருமுறைத்தலங்கள்


235/118. திருநாட்டியத்தான்குடி

      சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் மாவூர் கூட்டுரோடு வந்து,
அங்கிருந்து வடபாதி மங்கலம் செல்லும் பாதையில் சென்றால் இத்தலத்தை
யடையலாம். சாலையோரத்தில் ஊர் உள்ளது.

     கோட்புலி நாயனாரின் அவதாரத்தலம். அவருடைய இரு
புதல்வியர்களை - சிங்கடி, வனப்பகை - சுந்தரர் தம் புதல்வியர்களாக
ஏற்றருளிய பதி.

     இறைவன் - மாணிக்கவண்ணர், ரத்னபுரீசுவரர், கரிநாலேஸ்வரர்,
               நாட்டியத்து நம்பி
     இறைவி - மங்களாம்பிகை
     தலமரம் - மாவிலங்கை
     தீர்த்தம் - சூரிய தீர்த்தம், கரிதீர்த்தம் (இவைமுறையே கோயிலின்
              முன்னும் பின்னும் உள்ளன.)

     சுந்தரர் பாடல் பெற்றது.

     கிழக்கு நோக்கிய கோயில். நகரத்தார் திருப்பணி பெற்றது. கிழக்கு
கோபுர வாயிலின் முன் சுந்தரருக்கு கைகாட்டிய விநாயகர் சந்நிதி மேற்கு
நோக்கியுள்ளது. ஐந்துநிலை ராஜகோபுரம், உட்பிராகாரத்தில் விநாயகர்,
முருகன், விசுவநாதர், கஜலட்சுமி, நவக்கிரக சந்நிதிகள் உள்ளன.
கோஷ்டத்தில் உள்ள மூர்த்தங்கள் தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா
ஆகியன. கோட்புலி நாயனார் உருவம் உள்ளது. மகாமண்டபத்தில்
நடராசசபையும் உற்சவமூர்த்தங்களும் உள்ளன. இத்தல வரலாறு வருமாறு:-

     1) கோட்புலி நாயனார் வீட்டில் சுந்தரர் தங்கியிருந்தபோது வழிபடக்
கோயிலுக்குச் சென்றார். அங்கு இறைவனையும் இறைவியையும் காணாது
திகைத்தார். விநாயகரைக் கேட்க, அவர் வாய் திறந்து பேசாமல்
ஈசான்யதிசையை நோக்கிக் கை காட்டினார். அவ்வழியே சுந்தரர் சென்று,
அங்குள்ள ஒரு வயலில் சுவாமியும் அம்பிகையும் உழவன், உழத்தியாக நடவு
நட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார். கண்டதும்,