பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 715


     “நட்ட நடாக்குறை நாளைநடலாம்
     நாளை நடாக்குறை சேறு தங்கிடவே
     நட்டதுபோதும் கரையேறி வாரும்
     நாட்டியத்தான்குடி நம்பி” என்று பாடினார்.

     அது கேட்டதும் சுவாமியும் அம்பிகையும் மறைந்து கோயிலுக்குச்
செல்ல, சுந்தரர் பின் தொடர்ந்து கோயிலுள் செல்லும்போது பாம்பு வாயிலில்
தடுக்க அப்போது “பூணாணாவதோர்” என்று தொடங்கிப் பாடித் தரிசித்தார்
என்று தலவரலாறு சொல்லப்படுகிறது.

     2) யானை (கரி) யொன்று வழிபட்டதால் கரிநாலேஸ்வரர் என்று
சுவாமிக்குப் பெயர் வந்தது.

     3) அண்ணன் தம்பியருக்கிடையில் பாகம்பிரிக்க நேர்ந்தபோது தமக்குள்
இரத்தினங்களை மதிப்பிடுவதிலும் பிரிப்பதிலும் உடன்பாடு வரமுடியாமல்
இறைவனிடம் முறையிட, இறைவன் இரத்தின வியாபாரியாக வந்து பிரித்துக்
கொடுத்ததால் ரத்னபுரீசுவரர் என்று பெயர் பெற்றார்.

     
“பூணாணாவதொர் அரவம் கண்டு அஞ்சேன்
          புறங்காட்டு ஆடல் கண்டு இகழேன்
     பேணீராகிலும் பெருமையை யுணர்வேன்
          பிறவேனாகிலு மறவேன்
     காணீராகிலுங் காண்ப னென்மனத்தாற்
          கருதீராகிலுங் கருதி
     நானேல் உம் அடிபாடுதல் ஒழியேன்
          நாட்டியத்தான்குடி நம்பீ."           (சுந்தரர்)

                               - “எல்லற்கண்
     சேட்டியத்தானே தெரிந்து சுரர் வந்தேத்தும்
     நாட்டியத்தான் குடிவாழ் நல்லினமே.”           (அருட்பா)


அஞ்சல் முகவரி:-

     அ/மி. மாணிக்கவண்ணார் திருக்காயில்
     திருநாட்டியத்தான்குடி - அஞ்சல்
     (வழி) மாவூர் S.O. 610 202.
     திருவாரூர் வட்டம் - மாவட்டம்.