பக்கம் எண் :

724 திருமுறைத்தலங்கள்


     “பிடியதன் உரு உமை கொளமிகு கரியது
     வடிகொடுதனதடி வழிபடும் அவரிடர்
     கடிகணபதிவர அருளினன் மிகுகொடை
     வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே”        (சம்பந்தர்)

     “தாயும் நீயே தந்தை நீயே சங்கரனே அடியேன்
     ஆயுநின்பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்றதுள்ளம்
     ஆயமாய காயந்தன்னுள் ஐயர் நின்றொன்றலொட்டார்
     மாயமே என்றஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே”   (சம்பந்தர்)

     “நல்லான்காண் நான் மறைகளாயினான்காண்
          நம்பன்காண் நணுகாதார் புரமூன்றெய்த
     வில்லான்காண் விண்ணவர்க்கும் மேலானான்காண்
          மெல்லியலாள் பாகன்காண் வேத வேள்விச்
     சொல்லான்காண் சுடர் மூன்றுமாயினான்காண்
          தொண்டாகிப் பணிவார்க்குத் தொல்வான்ஈய
     வல்லான்காண் வானவர்கள் வணங்கியேத்தும்
          வலிவலத்தான்காண் அவன் என்மனத்துளானே."  (அப்பர்)

     “நல்லிசை ஞானசம்பந்தனும் நாவினுக்
          கரசரும் பாடிய நற்றமிழ் மாலை
     சொல்லியவே சொல்லி ஏத்துகப் பானைத்
          தொண்டனேன் அறியாமை அறிந்து
     கல்லியல் மனத்தைக் கசிவித்துக்
          கழலடிகாட்டி என்களைகளையறுக்கும்
     வல்லியல் வானவர் வணங்கநின்றானை
          வலிவலந்தனில் வந்து கண்டேனே."           (சுந்தரர்)

                                         - துன்றாசை
     வெய்யவலிவலத் தைவீட்டி அன்பர்க் கின்னருள்செய்
     துய்ய வலிவலத்துச் சொன்முடிபே.           (அருட்பா)


அஞ்சல் முகவரி:-

     
அ/மி. இருதயகமலநாதேஸ்வரர் திருக்கோயில்
     வலிவலம் & அஞ்சல் 610 207
     திருக்குவளை வட்டம் - திருவாரூர் மாவட்டம்.