பக்கம் எண் :

732 திருமுறைத்தலங்கள்


     “பாட அடியார் பரவக் கண்டேன்
          பத்தர்கணங்கண்டேன் மொய்த்தபூதம்
     ஆடல்முழவம் அதிரக் கண்டேன்
          அங்கை அனல்கண்டேன் கங்கையாளைக்
     காடல் அரவார் சடையிற்கண்டேன்
          கொக்கின் இதழ் கண்டேன் கொன்றைகண்டேன்
     வாடற்றலையொன்று கையிற் கண்டேன்
          வாய்மூர் அடிகளை நான் கண்டவறே."           (அப்பர்)

                                    - நீளுலகம்
     “கர்ய்மூர்க்கரேனுங் கருதில் கதி கொடுக்கும்
     வாய்மூர்க்கமைந்த மறைக்கொழுந்தே.”           (அருட்பா)

அஞ்சல் முகவரி:-

     அ/மி. வாய்மூர்நாதர் திருக்கோயில்
     திருவாய்மூர் & அஞ்சல்
     (வழி) திருக்குவளை S.O. 610 204
     திருவாரூர் வட்டம் - மாவட்டம்.

242 / 125. திருமறைக்காடு

வேதாரண்யம்

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     தற்போது வேதாரண்யம் என்று வழங்குகிறது.

     கும்பகோணம், மயிலாடுதுறை, மன்னார்குடி, நாகப்பட்டினம்,
திருத்துறைப்பூண்டி, திருவாரூர் முதலிய ஊர்களிலிருந்து செல்லலாம்.
வேதங்கள் வழிபட்ட தலம். மறைவனம், வேதவனம், சத்யகிரி, ஆதிசேது,
தென்கயிலாயம் என்பன வேறு பெயர்கள். ஏழு திருமுறைகளிலும் இடம்
பெற்ற சிறப்புடைய தலம். சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்று.

     இராமர் இங்கு வந்து வழிபட்டுத் தோஷம் நீங்கியதாகத் தல வரலாறு
சொல்லப்படுகிறது. சேரமான் பெருமாள் நாயனாருடன் சுந்தரர் வந்து தரிசித்த
தலம். விளக்கைத்தூண்டிய எலியை, மாவலியாகப் பிறக்குமாறு அருள் செய்த
இறைவன் எழுந்தருளியுள்ள பதி.