பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 737


            யாழைப் பழித்த மொழியம்மை துதி

     
வாலமதி நுதல்காட்ட, வதனம் செந்தா
          மறைகாட்ட, வறைகாட்ட வளர்ந்த கொங்கை
     நீலமலர் விழிகாட்ட, இமைய மென்னும்
          நெடுங்கிரியில் உதித்தறங்கள் நிகழ்த்தி யாவும்
     ஞாலமெலாம் பெற்றெடுத்தும் கன்னி யாகி
          நவிலுமறை நாதனிடம் நயந்து நிற்கும்
     பாலினையின் னமுதையருந்தேனை யாழைப்
          பழித்தமொழி உமைபாதம் பணிதல் செய்வாம்.


                       திருப்புகழ்

    
 சூழும்பி னைக்கட் டுன்பநெ டும்பிணி கழிகாமஞ்
          சோரமி தற்குச் சிந்தைநி னைந்துறு துணையாதே
     ஏழையெ னித்துக் கங்களு டன்தின முழல்வேனோ
          ஏதம கற்றிச் செம்பத சிந்தனை தருவாயே
     ஆழிய டைத்துத் தங்கையி லங்கையை யெழுநாளே
          ஆண்மைசெ லுத்திக்கொண்ட கரும்புயல் மருகோனே
     வேழமு கற்குத் தம்பியெ னுந்திரு முருகோனே
          வேத வனத்திற் சங்கரர் தந்தருள் பெருமானே
                                     (அருணகிரிநாதர்)


                                        
  - “நேயமுணத்
     தேடெலியை மூவுலகுந் தேர்ந்து தொழச் செய்தருளும்
     ஈடில் மறைக்காட்டில் என்றன் எய்ப்பில் வைப்பே.”
                                           (அருட்பா)

அஞ்சல் முகவரி:-

     அ/மி. வேதாரண்யநாதர் திருக்கோயில்
     வேதாரண்யம் & அஞ்சல் - 614 810
     வேதாரண்யம் வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம்.

தலம் - 47