பக்கம் எண் :

750 திருமுறைத்தலங்கள்


                                     -“மாப்புலவர்
     ஞானபரங்குன்றமென நண்ணி மகிழ்கூர்ந்தேந்த
     வான பரங்குன்றலின்பானந்தமே”.      (அருட்பா)


அஞ்சல் முகவரி :-

     
அ/மி.பரங்கிரிநாதர் திருக்கோயில்
     திருப்பரங்குன்றம் & அஞ்சல்
     மதுரை - 625 005.
 
248/4. திருஏடகம்

     பாண்டிய நாட்டுத் தலம்.

     வைகையின் கரையிலுள்ளது. திருஞானசம்பந்தர் ஆற்றிலிட்ட ஏடு
எதிரேறி கரையடைந்த இடம் இதுவே. “வாழ்க அத்தணர்” என்னும் பதிக
ஏட்டை ஞானசம்பந்தர் வைகையில் இட, அது நீரை எதிர்த்துச் செல்ல, பின்பு
“வன்னியும்மத்தமும்” என்னும் திருப்பதிகம் பாடியவுடன் அந்த ஏடு ஒதுங்கி
நின்ற தலம். (ஏடு-அகம்=ஏடகம்) மதுரையிலிருந்து சோழவந்தான் சாலையில்
சென்று இத்தலத்தை யடையலாம்.

     பிரமன், திருமால், ஆதிசேஷன், கருடன், வியாசர், பராசரர் ஆகியோர்
வழிபட்டது.

     இறைவன் - ஏடகநாதேஸ்வரர்
     இறைவி - ஏலவார்குழலி, சுகந்த குந்தளாம்பிகை
     தலமரம் - வில்வம்
     தீர்த்தம் - பிரம தீர்த்தக்குளம்

     சம்பந்தர் பாடல் பெற்றது.

     கிழக்கு நோக்கிய கோயில். வண்ண வளைவுள்ளது. அம்மையப்பருக்கு
ஐந்து நிலைக் கோபுரங்கள் தனித்தனியே காட்சி தருகின்றன. உள்செல்கிறோம்-
காட்சி தருவது, கம்பத்தடி மண்டபம், நடுவிலுள்ள பலிபீடம், ஓங்கிய
துவஜஸ்தம்பம், நுழைவு வாயிலில் இடப்பால் விநாயகரையும், முருகப்
பெருமானையும் கண்டு தொழுகின்றோம். துவார பாலகர் தரிசனம், மூலவர்
ஏடகநாதர். சிவலிங்கத் திருமேனி.