இத்திருக்கோயில் குன்றக்குடி (திருவண்ணாமலை) ஆதீனத்தின் ஆளுகைக்கு உட்பட்டதாகும். இப்பதி பாரிவள்ளலின் பறம்பு மலையாகும். சித்திரைத் திங்களில் நடைபெறும் பெருவிழாவில் ஏழாம் திருவிழாவன்று ‘பாரிவிழா’ மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது. “கைம்மா மதகரியின்னினமிடியின் குரலதிரக் கொய்ம்மா மலர்ச்சோலைபுக மண்டுங் கொடுங்குன்றம் அம்மானெனவுள்கித் தொழுவார்கட்கருள் செய்யும் பெம்மானவனிமையோர் தொழமேவும் பெரு நகரே.” (சம்பந்தர்) -“பூமீதின் நற்றவருங்கற்ற நவசித்தரும் வாழ்த்தி உற்றகொடுங் குன்றத்தெம் ஊதியமே.” (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. உமாமகேஸ்வரர் திருக்கோயில் பிரான்மலை & அஞ்சல் - 624 503. பசும்பொன் சிவகங்கை மாவட்டம். பாண்டிய நாட்டுத் தலம். மதுரைக்கும் காரைக்குடிக்கும் மத்தியில் உள்ளது. மதுரையிலிருந்தும் காரைக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை முதலிய ஊர்களிலிருந்தும் இத்தலத்திற்குப் பேருந்துகள் செல்கின்றன. (வடாற்காடு மாவட்டத்தில் இதே பெயரில் ஓர் ஊர் உள்ளது - திருப்பத்தூர். இது திருப்புத்தூர். அதனின் இது வேறானது. மக்கள் வழக்கில் இதுவும் திருப்பத்தூர் என்றே வழங்குகிறது. இத்தலம் பசும்பொன் மாவட்டத்தைச் சேர்ந்தது.) கோயிலுக்கு (ஸ்ரீ தளி) திருத்தளி என்று பெயர். ஊர்ப்பெயர் திருப்புத்தூர். இறைவன் - ஸ்ரீ தளீஸ்வரர், ஸ்ரீ தளிநாதர், திருத்தளிநாதர் இறைவி - சிவகாமி |