நந்தியும் பெரியதே. மகாமண்டபத்தில் வடபால் நடராசர் உற்சவ மூர்த்தியும், தென்பால் சோமாஸ்கந்தர், நால்வர், சேக்கிழார் ஆகியோர் காட்சி தருகின்றனர். சுவாமிக்கும் அம்பாளுக்கும் தனித்தனி கோயில்கள். ஆலயத்தில் ஐந்து விநாயகர்கள், சதுர்முகலிங்கம், கபிலபுத்திரர் ஒன்பதின்மர் ஆகியோரின் உருவங்கள் உள. இந்திரன் வழிபட்ட விநாயகர் “ஆகண்டல விநாயகர்” தனியே உள்ளார். (ஆகண்டலன் - இந்திரன்). கோஷ்ட மூரத்தமாக நிருத்த கணபதியும் தட்சிணாமூர்த்தியும் உளர். மேற்கு பிரகாரத்தில் குருந்த மரமுள்ளது. மதிலையொட்டி அகத்தியலிங்கம் (முனீசுவரர்) உள்ளது. இவருக்குத் திங்கட்கிழமைகளில் மட்டுமே பூஜை. கோஷ்ட மூர்த்தமாகப் பொதுவாக ஆலயங்களில் (கர்ப்பக்கிருகப் பின்சுவரில்) இடம்பெறும் இலிங்கோற்பவருக்குப் பதிலாக இங்கு திருமாலும், அநுமனும் காட்சி தருகின்றனர். நான்முகன் சந்நிதியும் உள்ளது. அம்பாள் ஆலயம் தனிக்கோயில். இத்தலத்தில் திருமால், பிரமன், இந்திரன், சூரியசந்திரர், எமன், ஐராவதம், வசிட்டர் முதலிய முனிவர்கள், அகத்தியர், சௌந்திர பாண்டியன் முதலியோர் வழிபட்டுப் பேறடைந்துள்ளனர். சக்தி வாய்ந்த குடவறைக் காளியை யொட்டி இப்பகுதியில் பெரும்பாலோர்க்கு காளியப்பன், காளியம்மாள் எனும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. இத்திருக்கோயிலில் உள்ள நடராஜ சபை சிவஞான சபை எனப்படுகிறது. தீர்த்தங்களின் பெயர்களும் இருக்குமிடங்களும் :- (1) இந்திரதீர்த்தம் - கோயில் சந்நிதிக்கு எதிரில் சற்று தொலைவில் (2) பிரம தீர்த்தம் - கோபுரவாயிலுக்கு வெளியில் தென்பால் (3) சக்கர தீர்த்தம் - தெற்கு மேற்கு வீதிகள் கூடுமிடம் (4) சூரிய தீர்த்தம் - அம்பாள் சந்நிதிக்குக் கிழக்கில் (5) இலக்குமி தீர்த்தம் - சூரிய தீர்த்தத்திற்கு மேற்கில் (6) சந்திர தீர்த்தம் - பிரமதீர்த்தத்திற்குக் கிழக்கில் (7) பாம்பாறு - கோயிலுக்குத் தென்பால் ஓடும் ஆறு (நாகநதி, அரவநதி, சர்ப்பாறு) (8) வருணதீர்த்தம் - ஊருக்குப் பக்கத்திலுள்ள “தீர்த்தாண்ட தானம்” என்னும் ஊருக்கருகிலுள்ள கடல். (9) கல்யாண தீர்த்தம் - ஊருக்குச் சற்றுத்தூரத்தில் உள்ள கல்யாணபுரத்தில் உள்ளது. |