தொழுது கங்கை நீருடன் திரும்பவும் இராமேஸ்வரம் வந்து இராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்து வணங்கியே யாத்திரையைப் பூர்த்தி செய்ய வேண்டும். இதுவே முறையானது. (கோயில் மிகப் பெரியதாதலின் பிற விவரங்களையும் சந்நிதிகளையும் நேரில் தரிசிக்கும்போது கேட்டும் கண்டும் பேறு பெறலாம்.) தேவியை வவ்விய தென்னிலங்கைத் தச மாமுகன் பூவியலும் முடி பொன்றுவித்த பழி போய் அற ஏ(வு) இயலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம் மேவிய சிந்தையி னார்கள்தம் மேல் வினை வீடுமே. (சம்பந்தர்) கோடி மாதவங்கள் செய்து, குன்றினார் தம்மை வல்லாம் வீடவே சக்கரத்தால் எறிந்து, பின் அன்பு கொண்டு தேடி மால் செய்த கோயில் திருஇரா மேச்சுரத்தை நாடி வாழ் நெஞ்சமே ! நீ நன்னெறி ஆகும் அன்றே. (அப்பர்) திருப்புகழ் வானோர் வழுத்துனது பாதார பத்மமலர் மீதே, பணிக்கும் வகை அறியாதே மானார் வலைக் கண் அதி லே,தூளி மெத்தையினில் ஊடே அணைத்(து) உதவும் அதனாலே தேனோடு, மருப்பில் எழு பாகேர, இதற்(கு) இணைகள் ஏதோ எனக் கலவி பலகோடி தீரா மயக்கினொடு, நாகா படத்தில் எழு சேறாடல் பெற்ற துயர் ஒழியேனோ? மேனாடு பெற்றுவலர் சூராதி பற்(கு) எதிரின் ஊ(டு) ஏகி நிற்கும் இரு கழலோனே ! மேகார உக்ர பரி தான் ஏறி, வெற்றிபுனை வீரா ! குறச் சிறுமி மணவாளா ! ஞானா பரற்(கு) இனிய வேதாக மப்பொருளை நாணாது உரைக்கும் ஒரு பெரியோனே ! நாராயணற்கு மருகா ! வீறு பெற்றிலகு ராமேச்சு ரத்திலுறை பெருமாளே ! |