பக்கம் எண் :

766 திருமுறைத்தலங்கள்


                      தாயுமானவர் பாடல்

     
பதியுண்டு, நிதியுண்டு, புத்திரர்கள் மித்திரர்கள்
          பக்கமுண்(டு), எக்காலமும்
     பவிசுண்டு, தவிசுண்டு திட்டாந்தம் ஆக யம
          படர் எனும் திமிரம் அணுகாக்
     கதியுண்டு, ஞானமாம் கதிருண்டு, சதிருண்டு
          காயசித் திகளும் உண்டு ;
     கறையுண்ட கண்டர்பால், அம்மை ! நின்தாளிற்
          கருத்(து) ஒன்றும் உண்டாகுமேல் ;
     நதியுண்ட கடலெனச் சமயத்தை உண்டபர
          ஞான ஆநந்த ஒளியே ;
     நாதாந்த ரூபமே ; வேதாந்த மோனமே !
          நான் எனும் அகந்தை தீர்த்(து)என்
     மதியுண்ட மதியான மதிவதன வல்லியே !
          மது சூதனன் தங்கையே !
     வரை ராஜனுக்கு இருகண் மணியாய் உதித்தமலை
          வளர் காதலிப் பெண் உமையே !

     பூரணி, புராதனி, சுமங்கலை, சுதந்தரி,
          புராந்தகி, த்ரியம்பகி, எழில்
     புங்கவி, விளங்குசிவ சங்கரி, சகஸ்ரதள
          புட்பமிசை வீற்றிருக்கும்
     நாரணி, மனோதீத நாயகி, குணாதீத
          நாதாந்த சக்தி என்றுன்
     நாமமே உச்சரித்திடும் அடியார் நாமமே
          நான் உச்சரிக்க வசமோ?
     ஆரணி, சடைக்கடவுள் ஆரணி எனப் புகழ,
          அகிலாண்ட கோடி யீன்ற
     அன்னையே பின்னையும் கன்னியென மறைபேசும்
          ஆனந்த ரூப மயிலே !
     வாரணியும் இரு கொங்கை மாதர் மகிழ் கங்கைபுகழ்
          வளமருவு தேவை அரசே !
     வரை ராஜனுக்(கு) இரு கண் மணியாய் உதித்தமலை
         வளர் காதலிப் பெண் உமையே !