தெய்வ கணபதி துதி வேணிமுடிப் பகீரதிநீர் புழைக்கை வாங்கி விடுத்(து) அயன்வெண் தலையுருட்டி, மிளிர்வெண் கோட்டால் கோண்இளைய மதிக்குழவி உழுது, மேருக் கொடுமுடியிற் கிளைத்த எண்தோள் குழையத் தாக்கி, தாள்நெடிய விடைமுனிந்து, கயிலை முக்கண் தாதையொடும் விளையாடித் தன்பால் அன்பர் மாண்நிலவு மனத்தறி நின்(று) உலவும் தெய்வ வாரணத்தை நினைத்திறைஞ்சி வழுத்தல் செய்வாம். (சேதுபுராணம்) - ‘சித்தாய்ந்து நாம் ஈசராகும் நலம்தரும் என்று உம்பர்தொழும் ராமீசம் வாழ் சீவரத்தினமே. (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. இராமநாதசுவாமி திருக்கோயில் இராமேஸ்வரம் & அஞ்சல் - 623 526. 253/9. திருஆடானை திருவாடானை | பாண்டிய நாட்டுத் தலம். காரைக்குடியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள தலம். தேவகோட்டையிலிருந்து 10 கி.மீ. தொலைவு. தேவகோட்டை வந்து திருவாடனை வரவேண்டும். காரைக்குடியிலிருந்தும் தேவகோட்டையிலிருந்தும் அடிக்கடி பேருந்துகள் உள்ளன. மிகப் பழமையான ஆலயம். வருணன் மகன் வாருணி துருவாசரைப் பழித்தமையால் ஆனை உடலும் ஆட்டுத் தலையுமாய் இருந்து இங்கு வழிபட்டுச் சாப விமோசனம் பெற்ற தலம். (ஆடு + ஆனை = ஆடானை) |