பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 769


     “மங்கை கூறினன் மான்மறியுடை
     அங்கையானுறை ஆடானை
     தங்கையாற்றெழு தேத்த வல்லவர்
     மங்குநோய் பிணிமாயுமே.”           (சம்பந்தர்)

                 திருப்புகழ்

     ஊனாறு முட்பிணியு மானாக வித்தவுட
          லுதாரி பட்டொழிய வுயிர்போனால்
          ஊரார் குவித்துவர ஆவாவெனக் குறுகி
          ஓழா முழக்கமெழ அழுதோய
     நான விதச்சிவிகை மேலே கிடத்தியது
          நாறா தெடுத்தடவி யெரியூடே
          நாணாமல் வைத்துவிட நீறாமெனிப்பிறவி
          நாடா தெனக்குன் அருள் புரிவாயே
     மானாகத்துத்திமூடி மீதே நிருத்தமிடு
          மாயோனு மட்டொழுகு மலர்மீதே
          வாழ்வா யிருக்குமொரு வேதாவு மெட்டிசையும்
          வானோரு மட்டகுல கிரியாவும்
     ஆனா வரக்கருடன் வானார் பிழைக்கவரு
         மாலால முற்றவமு தயிவோன்முன்
         ஆசார பத்தியுடன் ஞானா கமத்தையருள்
        ஆடானை நித்தமுறை பெருமாளே.
 
                                  -“பூமீது
     நீடானைசூழ நிலமன்னர் வாழ்த் துதிரு
     வாடானைமேவு கருணாகரமே.” -          (அருட்பா)


அஞ்சல் முகவரி :-

     அ/மி. அஜகஜேஸ்வரர் திருக்கோயில்
     திருவாடானை & அஞ்சல் - 623 407
     திருவாடானை வட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்.