பக்கம் எண் :

770 திருமுறைத்தலங்கள்


254/10. திருக்கானப்பேர் - திருக்கானப்பேரூர்

காளையார் கோயில்

     பாண்டிய நாட்டுத் தலம்.

     சிவகங்கை சமஸ்தானத்தின் கோயில், தேவகோட்டை ஜமீன்தார்
குடும்பத்தினரால் கோயில் திருப்பணி செய்யப்பட்டது. நீராழி மண்டபமும்
கட்டப்பெற்றது. அவர்களுடைய கட்டளையில் 6 காலபூசைகளும் நடைபெறு
கின்றன. இத்தலம் தற்போது காளையார் கோயில் என்று வழங்குகிறது.

     1) சென்னை-இராமேஸ்வரம்; திருச்சி-மானாமதுரை இருப்புப்பாதைகளில்
உள்ள நாட்டரசன் கோட்டை இருப்புப்பாதை நிலையத்தில் இறங்கி
அண்மையிலுள்ள இத்தலத்தையடையலாம்.

     2) சிவகங்கை, தேவகோட்டை, மதுரை ஆகிய ஊர்களிலிருந்தும்
இத்தலத்திற்குப் பேருந்து வசதிகள் உள்ளன. இறைவன் காளை வடிவங்
கொண்டு கையிற் பொற்செண்டும் திருமுடியில் சுழியுங்கொண்டு சுந்தரருக்குக்
காட்சி தந்து யாம் இருப்பது கானப்பேரூர் என்று கூறி ஆற்றுப்படுத்திய தலம்.

     ஐராவதம் வழிபட்டது. தக்ஷிணகாளிபுரம், சோதிவனம், மந்தார வனம்,
மோக்ஷப்பிரதம், அகத்தியக்ஷேத்ரம், காந்தாரம், தவசித்திகரம், தேவதாரு
வனம், பூலோக கைலாசம், மகாகாளபுரம் என்பன வேறு பெயர்கள். சங்க
காலத்தில் கானப்பேரெயில் என்ற பெயருடன்