பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 771


     விளங்கிய இத்தலம் உக்கிரப் பெருவழுதியின் கோட்டையாகத்
திகழ்ந்தது. இத்திருக்கோயிலில் மூன்று சந்நிதிகள் உள்ளன.

     காளீஸ்வரர் - சொர்ணவல்லி. 2) சோமேசர் - சௌந்தர நாயகி.

     சுந்தரேசர் - மீனாட்சி.

     சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்றது.

     முதல் சந்நிதி நடுவிலும், இரண்டாவது வலப்புறத்தும், மூன்றாவது இடப்புறத்தும் உள்ளன. தேவாரப்பாடல் பெற்றவர் காளீஸ்வரரே. இவர் பெயரில்தான் நிலபுலன்கள் உள்ளன. இப்பகுதியில் இம்மூன்று சந்நிதிகளை யொட்டி வழங்கும் பழமொழி : “காளைதேட - சோமர் அழிக்க -
சொக்கர் சுகிக்க”
என்பதாகும். விழாக் காலத்தில் வீதியுலா வருபவர்
சோமேஸ்வரரே. படையல் நிவேதனம் முதலியவைகள் சொக்கருக்கு.  

     தீர்த்தம் - கஜபுஷ்கரணி (யானைமடு), சிவகங்கைக் காளி

     தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், கௌரி தீர்த்தம், ருத்ர தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சுதர்சன தீர்த்தம் முதலியன.

     நீராழி மண்டபத்துடன் கூடிய பெரிய தெப்பக்குளம் - கஜபுஷ்கரணி தீர்த்தம் என்னும் யானைமடு. கோயிலின் எதிரில் மருதுபாண்டியர் சமாதி இருக்கிறது.

     சோமேசர் சந்நிதிக்கு எதிரில் உள்ள பெரிய கோபுரம் மருதுபாண்டி யரால் கட்டப்பெற்றது. இக்கோபுரத்தின் மீதேறிப் பார்த்தால் மதுரைக்
கோபுரம் தெரியுமாம். இதையொட்டி “மதுரைக் கோபுரம் தெரியக் கட்டிய மருதுபாண்டியன் வாராண்டி” என்னும் கும்மிப் பாட்டும் இங்கு வழக்கில் உள்ளது. மருதுபாண்டியர் கோபுரத்தைக் கட்டியது மட்டுமன்றித் தம் உயிரையும் கொடுத்து அக்கோபுரத்தைக் காத்த செய்தி நம்நெஞ்சத்தை உருக்குவதாகும். அஃதாவது:- மருதுபாண்டியரை கைது செய்ய எண்ணிய ஆங்கிலேயர், அவர்கள் வந்து சரணடையாவிட்டால் இக்கோபுரத்தை இடித்துவிடப் போவதாகப் பறை சாற்றினர். காட்டில் திரிந்து வாழ்ந்து கொண்டிருந்த மருதுபாண்டியர் இதையறிந்து கோபுரத்தைக் காக்க விரும்பி

     உயிரைப் பொருட்படுத்தாமல் வந்து சரணடைந்து, வெள்ளையரால் தூக்குத் தண்டனை விதிக்கப்பெற்றனர் என்பதாம். சிறிய கோபுரம் வரகுண பாண்டியனால் கட்டப்பட்டது.

     பண்டாசுர வதத்தின்பின் காளி இங்கு வந்து காளீசுவரை வழிபட்டுக் கரிய உருவம்மாறி சுவர்ணவல்லியாகி இறைவனை மணந்தாள்