பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 773


     “கோலக் காதிற் குழையாலே - கோதிச் சேர்மைக் குழலாலே
     ஞாலத்தாரைத் துயரே ;  செய் - நாரிக்காசைப் படலாமோ
     மேலைத் தேவர்க் கரியோனே - வீரச் சேவற் கொடியோனே
     காலப் பாசத் துயர் தீராய் கானப்பேரிற் பெருமாளே.”
                                              (திருப்புகழ்)
                     பதினோராம் திருமுறை

     முலைநலஞ்சேர் கானப்பேர் முக்கணா னென்னு
     முலைநலஞ்சேர் மொய்சடையானென்னு - முலைநலஞ்சேர்
     மாதேவா வொன்று வளர்கொன்றை வாய்சோர
     மாதேவா சோரல் வளை. (கபிலதேவர்)

     நிலைத்திவ் வுலகனைத்து நீரேயாய் நின்றீர்
     நிலைத்திவ் வுலகனைத்து நீரே - நிலைத்தீரக்
     கானப்பே ரீர்கங்கை சூடினீர் கங்காளீர்
     கானப்பே ரீர்கங்கை யீர்.
                                    (பரணத்தேவர்)

                                     -“சேடான
     வானப் பேராற்றை மதியை முடிசூடுங்
     கானப்பேரானந்தக் காளையே.”           (அருட்பா)

அஞ்சல் முகவரி :- 

     அ/மி. காளேஸ்வரர் திருக்கோயில்
     காளையார் கோயில்  &  அஞ்சல் - 623 551
     சிவகங்கை மாவட்டம்.

255/11. திருப்பூவணம்

     பாண்டிய நாட்டுத் தலம்.

     பாண்டிய நாட்டுத் தலங்களுள் மூவர் பாடலும் பெற்றது. இத்தலத்திற்கு
மதுரையிலிருந்து செல்லலாம். இத்தலம் மதுரை- மானாமதுரை பாதையில்
உள்ள புகைவண்டி நிலையம். இவ்வூர் (1) பழையூர் (2) புதூர் (3) கோட்டை
(4) நெல் முடிக்கரை என நான்கு