பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 779


     “கவ்வைக்கடல் கதறிக் கொணர் முத்தங் கரைக் கேற்றக்
     கொவ்வைத்துவர் வாயார் குடைந்தாடுந் திருச்சுழியல்
     தெய்வத்தினை வழிபாடு செய்தெழுவார் அடி தொழுவார்
     அவ்வைத் திசைக்கு அரசாகுவர் அலராள் பிரியாளே.”
                                             (சுந்தரர்)

     “அன்புடை நெஞ்சத்திவள்பேதுற அம்பலத் தடியார்
     என்பிடை வந்தமிழ்தூற நின்றாடியிருஞ் சுழியல்
     தன்பெடை நையத்தக வழிந்தன்னஞ் சலஞ் சலத்தின்
     வன்பெடை மேல்துயிலும் வயலூரன் வரம் பிலனே.”
             (உழையரிற்பழித்தல்-துறை. திருக்கோவையார் 37)

              திருமேனிநாதர் துதி

     “வருமேனிப் பிறப்பொழித்து மருவிய சாயுச்சியமே
     தருமேனிக் கவலையினித் தளர்வொழி நீமடநெஞ்சே
     கருமேனிப் பரந்தாமற் கொரு பாகங்கலந்தளித்த
     திருமேனிப் பெருமானைப் பணி கமலச் சேவடியே.”
                                         (தலபுராணம்)

                
     வாழ்த்து

     “திங்கள் மும்மாரி பெய்க புரவலர் செங்கோல் ஓங்க
     மங்கையர் கற்புநீட மாநிலஞ் செழித்து வாழ்க
     புங்கவர் கருணைகூர்க பூசுரர் சுருதி பொங்க
     சங்கரன் திருவெண்ணீறும் சைவமும் தழைக்கமாதோ”
                                       (தலபுராணம்)

     “துணைமாலையோடும் சுழியல் நகர் மேவும்
     இணையார் திருமேனி ஈசா”
           - (சிவக்ஷேத்ரசிவ நாமக்கலிவெண்பா - உமாபதிசிவம்)

                                        -‘தீவணத்தில்
     கண்சுழியல் என்று கருணையளித்து என்னுளஞ்சேர்
     தண்சுழியல் வாழ்சீவ சாக்ஷியே”      (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

     அ/மி. திருமேனிநாதர் திருக்கோயில்
     திருச்சுழி & அஞ்சல் - 626 129.
     திருச்சுழி வட்டம்- விருதுநகர் மாவட்டம்.