பக்கம் எண் :

780 திருமுறைத்தலங்கள்


257/13. திருக்குற்றாலம்

     பாண்டிய நாட்டுத் தலம்.

     நெல்லை மாவட்டத்தில் தென்காசிக்கும் செங்கோட்டைக்கும் இடையில்
குற்றாலம் உள்ளது. தென்காசியிலிருந்தும் செங்கோட்டையிலிருந்தும் அடிக்கடி
பேருந்துகள் உள்ளன. மதுரை திருநெல்வேலியிலிருந்தும் பேருந்துகள்
குற்றாலம் வழியாகச் செங்கோட்டை செல்கின்றன. (1) சென்னை - கொல்லம்
மெயிலில் (2) சென்னை - செங்கோட்டை பாசஞ்சரில், சென்று
செங்கோட்டையில் இறங்கி அங்கிருந்தும் பேருந்தில் வரலாம்.
இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள் :- திரிகூடாசலம், திரிகூடமலை என்பன.