பக்கம் எண் :

78 திருமுறைத்தலங்கள்


     வலப்பால் திருக்கல்யாண மண்டபம் உள்ளது. உள்ளே நுழைந்தால்
எதிரில் மதிற்சுவர்மீது  பஞ்ச  சபைகள்  உரிய நடராச தாண்டவத்துடன்
வண்ணத்தில் சுதை சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

     கோபுரத்தில் உள் பக்கத்தில்  தசாவதாரச்  சிற்பங்கள்,    கண்ணப்பர்
கண்ணை அப்புவது, அரிவாட்டாய நாயனார் மனைவியுடன் செல்வது முதலிய
சிற்பங்கள் உள.

     பிராகாரத்தில் வலமாக வரும்போது ஆருத்ரா அபிஷேக மண்டபம் -
இரத்தினசபை வாயில்  உள்ளது.   சபைக்கு  எதிரில்   நிலைக்கண்ணாடி
வைக்கப்பட்டுள்ளது. வலமாக வரும்போது ஆலங்காடு என்னும் பெயருக்கு
ஏற்ப மூலையில் பெரிய ஆலமரம் உள்ளது.

     அடுத்து அம்பாள் சந்நிதி உள்ளது - தெற்கு நோக்கியது,  நின்ற
திருக்கோலம். இக்கருவறையில் கோஷ்ட மூர்த்தங்கள் இல்லை.  சிற்பக்
கலையழகு வாய்ந்த  கல்தூண்கள்  காண  அழகுடையவை.   உற்சவத்
திருமேனிகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. அவற்றுள்:- பிட்சாடனர், விநாயகர்,
காரைக்காலம்மையார் (தாளமிட்டுப் பாடும் அமைப்பில்,) சுநந்த முனிவர்,
கார்க்கோடகன், நால்வர் முதலியவை சிறப்பானவை.

     இரத்தின சபை அழகு வாய்ந்தது. நடராசப் பெருமானின்  ஊர்த்துவ
தாண்டவச் சிறப்பு தரிசிக்கத்தக்கது.  அண்டமுற  நிமிர்ந்தாடும் பெருமான்
‘ரத்ன சபாபதி’ என்று அழைக்கப்படுகிறார். சிவகாமி, காரைக்காலம்மையார்
திருமேனிகள் உள்ளன.   பக்கத்தில்   பெரிய   ஸ்படிகலிங்கமும், சிறிய
மரகதலிங்கமும் (சபையில்)   உள்ளன.   இவற்றிற்கு   நான்கு    கால
அபிஷேகமுண்டு. திருமுறைப்பேழை உள்ளது. இரத்தினச் சபையை வலம்
வரலாம். வலம் வரும்போது சாளரத்தில் சண்டேசுவரரின் உருவம் உள்ளது.
சுந்தரர் பதிகம் கல்வெட்டில்   திருப்பனந்தாள்   ஸ்ரீ   காசி   மடத்துக்
கட்டளையாகப் பொறிக்கப்பட்டுள்ளது. இரத்தினச்   சபையின்   விமானம்
செப்புத் தகடுவேயப்பட்டு ஐந்து கலசங்களுடன் விளங்குகிறது.

     மூலவரைத் தரிசிக்க உள் பிராகாரத்தில்   செல்லும்போது  சூரியன்,
அதிகார நந்தி, விஜயராகவப் பெருமாள் தேவியருடன், சண்முகர், அகோர
வீரபத்திரர், சப்த கன்னியர், நால்வர், காரைக்காலம்யைார், கார்க்கோடகன்,
முஞ்சிகேசமுனிவர், பதஞ்சலி, அநந்தர், சண்டேச அநுக்ரஹர், எண்வகை
விநாயகர் உருவங்கள் முதலிய சந்நிதிகள் உள்ளன.

     கருவறை நல்ல கற்கட்டமைப்புடையது. கோஷ்ட மூர்த்தமாக விநாயகர்,
தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரமன், துர்க்கை