பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 79


ஆகியோர் உளர். துர்க்கைக்குப் பக்கத்தில் துர்க்கா பரமேஸ்வரர் உருவம்
ஒன்று கோஷ்ட மூர்த்தமாகவுள்ளது. சண்டேசுவரர் சந்நிதி உள்ளது -
பஞ்சபூதத் தலலிங்கங்கள் உள்ளன. சஹஸ்ரலிங்கம் தரிசிக்கத் தக்கது.
சுப்பிரமணியர், கஜலட்சுமி, பாபஹரீஸ்வர லிங்கம் முதலிய சந்நிதிகளும்
உள. - உபதேச தக்ஷிணாமூர்த்தி உருவம் மிக்க அழகுடையது. பைரவர்
வாகனமின்றிக் காட்சி தருகின்றார். ஆலயத்துள் அறுபத்து மூவர் சந்நிதிகள்
இல்லை.

     மூலவர் சந்நிதி வாயிலில் விநாயகரும் முருகனும் உள்ளனர். நேரே
மூலவர் காட்சி தருகிறார். வலப்பால் ஆனந்தத் தாண்டவ நடராஜர்
திருமேனி- சப்பரத்திலுள்ளது. தெற்கு நோக்கியது. எதிரில் வாயிலுள்ளது.
நடராசாவுக்குப் பக்கத்தில் மூலையில் சுரங்கப்பாதை உள்ளது. மூடியுள்ள
கல்லைத்தூக்க இருவளையங்களையும் மேலே வைத்துள்ளார்கள். சுரங்கம்
எங்குச் செல்கிறதோ? தெரியவில்லை. துவார பாலகர்களைத் தாண்டிச்
சென்றால் மூலவர் தரிசனம். சுயம்பு மூர்த்தி.

     மூலவருக்கு மேல் உருத்திராக்க விதானம் - திருப்பனந்தாள் ஸ்ரீ காசி
மடத்துப்பணி உள்ளது.

     மூலவரின் பக்கத்தில் போகசக்தி அம்மன் உற்சவத் திருமேனி உள்ளது.
சிவலிங்கத் திருமேனியின் மீது கோடுகள் அமைந்துள்ளன. பங்குனி
உத்திரத்தில் பெருவிழா நடைபெறுகிறது. ஊருக்குப் பக்கத்தில் காளிகோயில்
உள்ளது. இத்தலத்திற்குத் தொடர்புடைய ‘பழையனூர்’ கிராமம், பக்கத்தில் 2
கி.மீ. தொலைவில் உள்ளது. இறைவன், இறைவி சந்நிதிகள் உள்ளன.
இங்குள்ள இறைவன் - அம்மையப்பர் ; இறைவி - ஆனந்தவல்லி. மேற்கு
நோக்கிய சந்நிதி.

     பழையனூருக்குச் செல்லும் வழியில், திருவாலங்காட்டிலிருந்து ஒரு
கி.மீ.ல் பழையனூர் வேளாளர்கள் எழுபதுபேர் தீப்பாய்ந்து செட்டிப்
பிள்ளைக்குத் தந்த வாக்குறுதியைக் காத்த ‘தீப்பாய்ந்த மண்டபம்’ உள்ளது.
திருவாலங்காட்டுப் பேருந்து நிலையத்திலிருந்து பார்த்தாலே மண்டபம்
தெரிகின்றது. இங்குள்ள தொட்டியின் உட்புறத்தில் இவர்களுடைய
உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. யாகம் வளர்த்து இறங்குவது போன்ற
சிற்பம் உள்ளது. இதன் எதிரில் கிழக்கு நோக்கிய சந்நிதியாகச் ‘சாட்சி
பூதேஸ்வரர்’ காட்சியளிக்கின்றார். எதிரில் தீப்பாய்ந்த இடம் உள்ளது.

     தீப்பாய்ந்த வேளாளர்களின் மரபில் பழையனூரில் தற்போதுள்ளவர்கள்
நாடொறும் திருவாலங்காடு வந்து இறைவனைத் தரிசித்துச்