பக்கம் எண் :

784 திருமுறைத்தலங்கள்


யெடுக்கப் பட்டுள்ளன. அவற்றிலிருந்து நீட்டலளவைகோல் - சுந்தர
பாண்டியன் கோல் என்ற பெயரால் வழங்கியமை தெரிகிறது. மற்றும் மக்கள்
சபை, ஐந்நூற்றுமூவர் சபை முதலிய குழுக்களைப் பற்றியும் தெரியவருகின்றது.

    
 “வம்பார் குன்றம் நீடுயர்சாரல் வளர் வேங்கைக்
     கொம்பார் சோலைக் கோலவண்டியாழ் செய்குற்றாலம்
     அம்பா னெய்யோடாடலமர்ந்தான் அலர் கொன்றை
     நம்பான்மேய நன்னகர் போலும் நமரங்காள்.”

   “திருந்தமதி சூடித் தெண்ணீர் சடைக்கரந்து தேவிபாகம்
    பொருந்திப் பொருந்தாத வேடத்தாற் காடுறைதல் புரிந்த செல்வர்
    இருந்த இடம் வினவில் ஏலங் கமழ் சோலையின வண்டியாழ் செய்
    குருந்த மண நாறுங் குன்றிடஞ் சூழ் தண்சாரற்குறும் பலாவே.”
                                            (சம்பந்தர்)

     உற்றார் ஆருளரே - உயிர்
         கொண்டுபோம் பொழுது
     குற்றாலத்துறை கூத்தனல்லால் நமக்கு
          உற்றார் ஆருளரோ?”
                   (அப்பர் - திருவங்கமாலை)

     “உற்றாரையான் வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
     கற்றாரையான் வேண்டேன் கற்பனவும் இனி அமையும்
     குற்றாலத்தமர்ந்துறையும் கூத்தா உன் குரைகழற்கே
     கற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே.”
                                        (திருவாசகம்)

     “காலன் வருமுன்னே கண்பஞ்சடைமுன்னே
     பாலுண் கடைவாய் படுமுன்னே - மேல் விழுந்தே
     உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
     குற்றாலத் தானையே கூறு.” (பட்டினத்தார்)

     “சக்தி பீடத்தின்மேவும் தாரகப் பிரமம் போற்றி
     முத்தி தந்தருள வேண்டி முளைத்தருள் முதலே போற்றி
     யத்திர விழி பண்பாட வந்தரப்பேரியார்ப்பச்
     சித்திர சபையிலாடுந் தெய்வ நாயகனே போற்றி.”
                                     (தலபுராணம்)