பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 785


      “சுற்றாத ஊர்தேடிச் சுற்றவேண்டாம் புலவீர்
       குற்றாலமென்றொரு காற்கூறின் - வற்றா
       வடவருவியானே மறு பிறவிச் சேற்றில்
       நடவருவியானே நமை”                    (குற்.குறவஞ்சி)

                         -“பண்செழிப்பக்
       கற்றாலங் குண்மைக் கதிதருமென்றற்றவர்சூழ்
       குற்றாலத் தன்பர் குதூகலிப்பே.”               (அருட்பா)


அஞ்சல் முகவரி :-

     அ/மி. குற்றாலநாதர் திருக்கோயில்
     குற்றாலம் & அஞ்சல் - 627 802.
     திருநெல்வேலி மாவட்டம்.

258/14. திருநெல்வேலி

     பாண்டிய நாட்டுத் தலம்.

     திருநெல்வேலி, மாவட்டத் தலைநகரம். சென்னையிலிருந்து விரைவுப்
பேருந்துகளும், புகைவண்டி வசதிகளும் உள்ளன.