பக்கம் எண் :

790 திருமுறைத்தலங்கள்


     உட்டிரு விளக்கான அகரமுகரம் மகரம்
          ஒளிர்விந்து நாதவடிவாய்
     உயர்மந்த்ர பதவன்ன புவன தத்துவ கலைகள்
          ஓராறி னுக்குமுதலா
     மட்டில் குடிலைப்பொரு ணிறைமுறையுஞ் சொல்ல
          மாட்டாத படியினாலே
     மனத்தெழு மகந்தையா னானென்னும் வறுமைதனை
          மாற்றியருள் வாழ்வு தரவே
     எட்டிருங் கைக்கமல னைக்குட்டி யேபின்
          இருஞ்சிறையிலிட்டு வைத்தே
     இருநூ றெனுங்கணக் கோடுநா லாறா
          மெனும் புவன மண்டகோடி
     சிட்டியுஞ் செய்துபின் அயன்சிறை விடுத்தவா
          செங்கீரை யாடியருளே
     செல்வந் தழைத்து வளர் நெல்வேலி வாழ்செட்டி
          செங்கீரை யாடியருளே
                          (க்ஷேத்திரக்கோவை பிள்ளைத் தமிழ்)

                                        -“பொற்றாம
     நல்வேலி சூழ்ந்து நலன்பெறுமொண் செஞ்சாலி
     நெல்வேலி யுண்மை நிலயமே”           (அருட்பா)

அஞ்சல் முகவரி :

     அ/மி. நெல்லையப்பர் திருக்கோயில்
     திருநெல்வேலி 627 001.

259/1. (திருப்புக்கொளியூர்) அவிநாசி

     கொங்கு நாட்டுத் தலம்.

     மக்கள் வழக்கில் அவிநாசி என்று வழங்கப்படுகிறது. கோயம்புத்தூர்,
சேலம், ஈரோடு, திருப்பூர் முதலிய ஊர்களிலிருந்து பேருந்தில் செல்லலாம்.

     கோவையிலிருந்து 40 கி.மீ ; திருப்பூரிலிருந்து 14 கி.மீ ;
திருமுருகன்பூண்டியிலிருந்து 5 கி.மீ தொலைவில் கோவை - ஈரோடு
நெடுஞ்சாலையில் இத்தலம் உள்ளது. பழையபதியாகிய புக்கொளியூர்