பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 791


     நத்தம் தற்போது அழிந்து வெட்ட வெளியாகவுள்ளது. பிற்காலத்தில்
தோன்றிய புதிய நகரமே, தற்போதுள்ள அவிநாசியாகும். அவிநாசி - விநாசம்
இல்லாதது. ஊர்ப்பெயர் - புக்கொளியூர், இறைவன் - அவிநாசி. இறைவன்
பெயரே இன்று ஊர்ப்பெயராயிற்று.

     இறைவன் - அவிநாசி லிங்கேஸ்வரர், அவிநாசி ஈஸ்வரர், அவிநாசி
                நாதர், பெருங்கேடிலியப்பர்.
     இறைவி - கருணாம்பிகை, பெருங்கருணை நாயகி.
     தலமரம் - பாதிரி (ஆதியில் மாமரம்) மிகப்பெரிய நந்தி.

     சுந்தரர் பாடல் பெற்ற தலம்.

     இக்கோயிலில் முதலில் உள்ள வழிகாட்டி விநாயகரைத் தரிசித்து, பிறகு
தவத்திலிருக்கும் (பாதிரி மரத்து) அம்பாளைத் தரிசித்து, பிறகு தான்
சுவாமியைத் தரிசிக்கச் செல்லவேண்டும். கோயிலின் முன் உள்ள கல்லால்
ஆன (துவஜ) தீபஸ்தம்பத்தின் கீழ் தனியே சுந்தரர் உருவம், முதலை
பிள்ளையை வெளிப்படுத்தும் சிற்பம் முதலியவை கல்லில் செதுக்கப்
பட்டுள்ளன. உள் பிரகாரத்தில் துர்க்கை சந்நிதி தனியே உள்ளது. அடுத்த
உள்சுற்றில் அறுபத்துமூவர் திருமேனிகளும், சுப்பிரமணியர், காலபைரவர்
சந்நிதிகளும் உள்ளன. அவிநாசி முருகன் சந்நிதி சிறப்புடையது.
அதுபோலவே காலபைரவர் சந்நிதியும். (இச்சந்நிதி உள் பிராகாரத்தில்
இருப்பது இங்கு மட்டும்தான்) இவருக்கு