பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 793


    “மந்தி கடுவனுக்கு உண்பழம் நாடி மலைப்புறம்
     சந்திகள் தோறும் சலபுட்பமிட்டு வழிபடப்
     புந்தியுறைவாய் புக்கொளியூர் அவிநாசியே
     நந்நியுனை வேண்டிக்கொள்வேன் நரகம் புகாமையே.”
                                             (சுந்தரர்)

                     திருப்புகழ்

     இறவாமற் பிறவாமல் - எனையாள் சற்குருவாகிப்
     பிறவாகித் திரமான - பெருவாழ்வைத் தருவாயே
     குறமாதைப் புணர்வோனே - குகனே சொற்குமரேசா
     அறநாலைப் புகல்வோனே - அவிநாசிப் பெருமாளே.

    “ஆன்று நிறைந்தோர்க்கு அருள் அளிக்கும் புக்கொளியூர்த்
     தோன்றம் அவிநாசிச் சுயம்புவே”            (அருட்பா)


அஞ்சல் முகவரி :-
     அ/மி. அவிநாசி லிங்கேஸ்வரசுவாமி திருக்கோயில்
     அவிநாசி & அஞ்சல் - 641 654.
     அவிநாசி வட்டம் - கோவை மாவட்டம்.

260/2. திருமுருகன்பூண்டி