பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 795


     கேது ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. இத்தலத்திற்குத் தலபுராணம்
உள்ளது. செட்டிப்பாளையம் வாசுதேவ முதலியார் பாடியது. நாடொறும்
நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. மாசி மாதத்தில் 11 நாள்களுக்குப்
பெருவிழா நடைபெறுகிறது.

    
 “கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர் விரவலாமை சொல்லித்
     திடுகு மொட்டெனக் குத்திக் கூறை கொண்டாறலைக்குமிடம்
     முடுகுநாறிய வடுகர் வாழ்முருகன் பூண்டிமா நகர்வாய்
     இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும் எத்துக்கிங்கிருந்தீரெம்
                                            பிரானிரே.”
                                               (சுந்தரர்)

                  
 திருப்புகழ்

     
அவசியமும் வேண்டிப் பலகாலும்
          அறிவினுணர்ந்தாண்டுக் கொருநாளில்
     தவசெபமும் தீண்டிக் கனிவாகிச்
          சரணமதும்பூண்டற் கருள்வாயே
     சவதமொடுந் தாண்டித் தகரூர்வாய்
          சடுசமயங் காண்டற் கரியானே
     சிவகுமரன்பூண்டிற் பெயரானே
          திருமுருகன் பூண்டிப் பெருமாளே.

                                     -“சான்றவர்கள்
     தம்முருகன் பூணுட் டலம்பால வாழ்கின்ற
     வெம்முருகன் பூண்டி இருநிதியே.”   (அருட்பா)


அஞ்சல் முகவரி :-

     
அ/மி. முருகநாதேஸ்வரர் தேவஸ்தானம்
     திருமுருகன்பூண்டி & அஞ்சல் 641 652
     அவிநாசி வட்டம் - கோவை மாவட்டம்.

261/3. திருநணா

பவானி

     கொங்கு நாட்டுத் தலம்.

     தற்பொழுது பவானி என்று வழங்கப்படுகிறது.

     சேலம், ஈரோடு, கோயம்புத்தூர் முதலிய நகரங்களிலிருந்து பேருந்தில்
செல்லலாம். (ஈரோட்டிலிருந்து 12 கி.மீ.)